பக்கம்:கன்னித் தமிழ்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

கன்னித் தமிழ்


வேறு ஒருவகை மனிதனைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்கிருேம். மேலே சொன்ன பணக்கார னுக்கு நேர்விரோதமான நிலை படைத்தவன் அவன்.

‘அந்தக் காலத்தில் எங்கள் தாத்தா வீட்டில் இருபது எருமை கறக்கும். முப்பது பசுமாடு பால் வெள்ளம் பொழியும். தேஸ்ரீ பாலாறு என்று பேச் சுக்குச் சொல்கிருேமே; உண்மையாக அப்படித்தான் இருந்ததாம். அந்த ஜமீன்தாருக்குத் திடீரென்று ஆயிரம் இரண்டாயிரம் வேண்டுமென்றால், இரண்டாம் பேருக்குத் தெரியாமல் எங்கள் தாத்தாவிடம் வருவார். கணிரென்று ஒலிக்கும் வெள்ளி ரூபாய் ஆயிரம் வாங்கிக் கொண்டு போவார். ஒரு சீட்டு நாட்டு வேண்டுமே, ஒன்றும் இல்லை. வேளைக்கு நூறு இலை விழுமாம். எங்கள் வீட்டுச் சமையலறையைப் பார்த் தாலே அவர் காலத்து அன்னதானச் சிறப்புத் தெரிய வருமே கொடியடுப்பு எங்கள் வீட்டில் இல்லை; எல்லாம் கோட்டை யடுப்புத்தான்!”

“அப்படி இருந்த குடும்பமா இப்படி ஆயிற்று? உங்களுக்கு இப்போது நாலு குழந்தைகளை வைத்துக் கொண்டு காப்பாற்றும் சக்தி இல்லையே’

அதற்கு என்ன செய்கிறது? நான் பண்ணின பாவம். இன்று கோடீசுவரகை இருக்கிருனே, அவன் எங்கள் வீட்டுக் காரியக்காரகை இருந்தவனுடைய பேரன்; தெரியுமா?’ - པལན་བར་དུ་ཐལ་བར་སྨོན་པ་ལ་བ་ལང་ལ་ཕག་

புதிய பணக்காரன், பழைய பணக்காரக் குடும் பத்திலே பிறந்தவன் என்ற இரண்டு வகையினர் களையே அதிகமாக உலகத்தில் பார்க்கிருேம். எங்கோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/10&oldid=1285969" இலிருந்து மீள்விக்கப்பட்டது