பக்கம்:கன்னித் தமிழ்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியச் актásu 3.

சில பேர் மாத்திரம் பரம்பரை பரம்பரையாகப் பொருளைப் போற்றிப் பணக்காரன் மகன் பணக்காரணுக வந்து’ கொண்டிருக்கிறார்கள். -

புதுப் பணக்காரனைவிட்டுப்பழம் பணக்காரக் குடும் பத்திலே பிறந்தவனை யாராவது கவனிப்பார்களா? மாட்டார்கள். புதுப்பணக்காரனுடைய ஊக்கமும் உழைப்பும் உலகத்தில் பாராட்டப்படுகின்றன. பழம் பணக்காரனே, தன் தாத்தா காலத்துக் கதையைப் பேசிக்கொண்டு காலங் கழிக்கிருன். புதிய செல்வம் சேர்ப்பதிலோ, பழைய செல்வமோ நிலமோ தனக்குத் தெரியாமல் மறைந்திருந்தால் அவற்றைக் கண்டெடுப் பதிலோ நாட்டம் செல்வதில்லை. அவனால் யாருக்கு என்ன பயன்?

மேல் நாட்டாருடைய இலக்கியச் செல்வத்தையும் நம் நாட்டு இலக்கியச் செல்வத்தையும் நோக்கும் பொழுது இந்த இருவகை மனிதர் நிலைகளும் நினைவுக்கு வருகின்றன. சில நூறு ஆண்டுகளுக் குள்ளே அவர்கள் பெரு முயற்சில்ை பலபல துறை களில் முன்னேறி விட்டார்கள். கலைச் செல்வத்தைக் குவித்து விட்டார்கள். நாமோ பழம் பெருமை பேசிக் கொண்டு, மேல் நாட்டினர் மரத்திலே தெரத்திக் கொண்டு தொங்கிய காலத்தில் நாம் மாளிகையிலே மெத்தை போட்டுப் படுத்துக் கொண்டிருந்தோம் என்று பெருமிதம் அடைகிருேம். இன்று கட்டாந் தரையில் கல்லும் முள்ளும் உறுத்தப் புரளுவதை அப்போதைக்கு மறந்து விடுகிருேம். - -

செல்வம் பழையதானுலும் புதியதாலுைம் செல் வந்தான். மேல் நாட்டின்ர் குவித்த கலைச் செல்வத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/11&oldid=612677" இலிருந்து மீள்விக்கப்பட்டது