பக்கம்:கன்னித் தமிழ்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

கன்னித் தமிழ்


துக்கு உலகமே பெருமதிப்பை அளிக்கிறது. நாமும் அளிக்கக் கடமைப்பட்டிருக்கிருேம்.

பிறர் செல்வத்தைக் குறை கூறுவது தவறு; அவர்கள் செல்வத்தைக் கண்டு மகிழ்வதோடு நின்று, நம் செல்வத்தை அடியோடு மறப்பது அதைவிடத் தவறு. ‘நமக்குச் செல்வம் இருந்தது. இப்போதும் புதையலாக இருக்கிறது” என்று சொல்லும் நிலையில் தான் நாம் இருக்கிருேம். அந்தப் புதையல்களை அகழ்ந் தெடுத்துக் கொணர்ந்து, “இதோ பாருங்கள் தங்கக் கட்டி; இதோ பாருங்கள் நவ மணிகள்’ என்று எடுத்துக்காட்டும் ஆண்மையும் ஆர்வமும் நமக்கு வேண்டும்.

மனிதனுடைய வரலாற்றை ஆராயும் ஆராய்ச் சிக்காரர்கள் உலகத்தில் முதல் மனிதன் இன்ன இடத்தில்தான் தோன்றியிருக்க வேண்டும் என்று ஊகித்துக் கூறுகிறார்கள். எல்லோரும் ஒரே இடத் தைக் கூறவில்லை. ஒருவர் மத்திய ஆசியாவில்தான் முதல் மனிதன் வாழ்ந்தான் என்றால், மற்றாெருவர் வேறேரிடத்தைக் குறிக்கிறார். இப்படித் தீர்மானித் துள்ள இடங்களில் தமிழ் நாடும் ஒன்று. சில அறிஞர் களுக்குப் பழங்கால மனிதன் தமிழ்நாட்டில்தான் வாழ்ந்திருக்க வேண்டும் என்று படுகிறது. எல்லோ ரும் ஒப்புக் கொள்ளும்படியாக ஒரு முடிவு, ஆராய்ச்சி யில் இலேசிலே வராது. ஆகவே, தமிழ் நாட்டில் முதல் மனிதன் வாழ்ந்தான் என்பது சந்தேகமில்லாமல் நிச்சயமாகவில்லை என்று வைத்துக்கொண்டாலும், முதல் மனிதன் வாழ்க்கையைக் குறிக்கும் பழைய சின்னங்கள் இங்கே உள்ளன என்ற உண்மையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/12&oldid=1285970" இலிருந்து மீள்விக்கப்பட்டது