பக்கம்:கன்னித் தமிழ்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந் தமிழர் ஓவியம் 93.

சித்திரசாலையில் ஒருமருங்கு துருவ சக்கரத்தை எழுதியிருக்கிறார்கள், சூரியனையும் வேறு கிரகங்களையும் எழுதியிருக்கிறார்கள். இருபத்தேழு நட்சத்திரங்களை யும், பிற விண் மீன்களையும் ஓவியமாகத் தீட்டியிருக் கிறார்கள். அவற்றையெல்லாம் பார்த்துப் பலர் மகிழ் கின்றனர்.

இதோ ஒரு மங்கை சித்திரசாலையில் வேறு ஒரு பகுதியிலே நிற்கிருள். அவள் முன்னே அழகெலாம் திரண்ட பெண் உருவம் ஒவியமாக நிற்கிறது. ‘இவள் யார்?’ என்று கேட்கிருள் அவள். அருகே நின்ற கட்டிளங் காளையைத்தான் கேட்கிருள். ‘இவளா? இவள்தான் ரதி’ என்று விடை அளிக்கிருன். அப் படிக் கூறும் விடையில் அன்பு கொஞ்சுகிறது. அந்த உருவத்தை அடுத்துக் கையில் கரும்பு வில்லும் மலரம் பும் ஏந்திய அழகன் ஒருவனது சித்திரம் நிற்கிறது. “இவன் யார்?’ என்று கேட்கிருள் காதலி. காதலன் உடனே, “இந்த ரதிக்கு ஏற்ற மன்மதன்” என்று புன்னகையோடு சொல்கிருன் பிரியாமல் இணைந்து நிற்கும் அவ்விருவரையும் ஒருங்கு நோக்கிய அவ்விரு காதலரும் தம்மையும் பார்த்துக் கொள்கின்றனர். “இப்படியே பிரியாமல் இன்ப சாம்ராஜ்யத்து அரச ணுகவும் அரசியாகவும் நாம் இருக்கவேண்டும்’ என்று அந்த இரண்டு உள்ளங்களினூடே ஒர் எண்ணம் ஒடுகிறது.

இதோ மற்றாெரு புறம் புராணக் கதைகளைச் சித் திரமாக எழுதியிருக்கிறார்கள். அகலிகையின் கதை ஒவியமாகத் தீட்டப் பெற்றிருக்கிறது.

‘இவனைப் பார்; இவன்தான் இந்திரன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/101&oldid=612651" இலிருந்து மீள்விக்கப்பட்டது