பக்கம்:கன்னித் தமிழ்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

கன்னித் தமிழ்


யான வண்ண ஒவியங்கள் இருந்தன. அவற்றின் குறைப்பகுதிகள் இன்றும் ஓவியக்கலைஞருடைய உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வண்ணம் காணப் படுகின்றன.

பழங்காலத்திலும் கோயில்களில் சித்திரங்களைச் சுவரில் எழுதி வந்தார்கள். திருப்பரங்குன்றம் முருக வேள் கோயில் கொண்டுள்ள தலம். மிகப் பழங்காலந் தொடங்கியே முருகனுடைய தலமாக அது போற்றப் பெற்று வருகிறது. அக் கடவுளுக்குரிய ஆறு படை வீடுகளுள் முதலாவதென்ற சிறப்பு அதற்கு உண்டு. நக்கீரர் தாம் இயற்றிய திருமுருகாற்றுப் படையில் அதனை முதலில் வைத்துப் பாராட்டி யிருக்கிறார். பரி பாடல் என்ற நூலில் அம்மலைக் கோயிலில் நிகழும் விழாவும், மதுரைமா நகரத்துள்ளார் கூட்டங் கூட்ட மாகச் சென்று முருகனை வழிபடும் காட்சிகளும் அழ காக வருணிக்கப்பட்டுள்ளன. மகளிரும் ஆடவரும் கூடி ஒன்றுபட்டு அங்குள்ள இயற்கைக் காட்சிகளையும் செயற்கைக் காட்சிகளையும் கண்டு மகிழ்ந்து தம் முள்ளே பேசிக்கொள்ளும் பேச்சையும் அந்நூற் பாடல்கள் தெரிவிக்கின்றன. -

திருப்பரங்குன்றத்தில் மூங்கில்கள் ஒரு பால் அடர்ந்துள்ளன. பாறைகள் பரந்துள்ளன. அந்தப் பாறைகளுக்கிடையே ஓவியச்சாலை அமைந்திருக் கிறது. அந்தக் கோயிலுக்கே அந்தச் சித்திர மண்ட பம் சோபனத்தை அளிக்கிறது. காதல் மிக்க மடந்தை யரும் ஆடவரும் வந்து வந்து அந்தச் சித்திரச்சாலையி லுள்ள சித்திரங்களைக் கண்டு இன்புறுகிறார்கள். எழுத்து நிலை மண்டபம், எழுதெழில் அம்பலம் என்ற பெயரால் அந்தச் சித்திரசாலை வழங்குகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/100&oldid=1286008" இலிருந்து மீள்விக்கப்பட்டது