பக்கம்:கன்னித் தமிழ்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந் தமிழர் ஓவியம் 91.

கலை வல்லவன் எழுதிய வண்ணப் படாத்தை இங்கே

போர்த்து வைத்திருக்கிறார்களோ’ என்று தோன்று.

கிறதாம்.

குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும்

திலகமும் வகுளமும் செங்கால் வெட்சியும் நரந்தமும் நாகமும் பரந்தலர் புன்னேயும் பிடவமும் தளவமும் முடமுள் தாழையும் குடசமும் வெதிரமும் கொழுங்கால் அசோகமும் செருந்தியும் வேங்கையும் பெருஞ்சண் பகமும் எரிமலர் இலவமும் விரிமலர் பரப்பி வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச் சித்திரச் செய்கைப் படாம்போர்த் ததுவே

ஒப்பத் தோன்றிய உவவனம்.

காவிரிப்பூம் பட்டினத்தில் பெரிய மாளிகைகள் இருக்கின்றன. அந்த மாளிகைகளில் வெவ்வேறு வகையான வண்ண ஒவியங்களைச் சித்திரித்திருக் கிறார்கள், வண்ணத்தாலும் பிற வகையிலுைம் வெவ். வேறு விதமான எழிலோடு அவை விளங்குகின்றன. பட்டினப் பாலை என்ற சங்கநூல்,

வேறுபட்ட வினையோவத்து வெண்கோயில் என்று அந்த மாளிகைகளை வருணிக்கின்றது.

மாளிகைகளின் புறத்தே இப்படிச் சித்திரங்களை அமைப்பதோடு உள்ளே சுவரில் ஒவியங்களைத் தீட்டு வதும் உண்டு. தெய்வத் திருக் கோயில்களில் இத்த கைய சித்திரங்கள் இருந்தன. சிற்றன்ன வாசல், கைலாசநாதர் கோயில், தஞ்சைப் பிருகதீசுவரர் கோயில் என்னும் இடங்களில் சுவர்களில் அருமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/99&oldid=613454" இலிருந்து மீள்விக்கப்பட்டது