பக்கம்:கன்னித் தமிழ்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

கன்னித் தமிழ்


வீடுகளில் சுவர்களிலும் நிலைகளிலும் மேற் கட்டிகளிலும் சித்திரங்களை அமைத்தனர். படுக்கை விரிப்புக்களிலும் ஆடைகளிலும் அழகிய ஓவியங்களைப் பொறித்தனர். கண்ணுக்கு இனிமை தரும் முறையில் அந்தச் சித்திரங்கள் அமைந்திருந்தன. அதனல் ஏதேனும் அழகான இடத்தைப் பாராட்ட வேண்டு மால்ை, “இந்த இடம் சித்திரத்தைப்போல அழகாக

இருக்கிறது’ என்று புலவர்கள் பாடியிருக்கிறார்கள்.

மதுரைமா நகரத்தில் இருவகை அங்காடி வீதிகள் இருந்தன. அங்கே கடைகளெல்லாம் ஒழுங்காகவும் அழகாகவும் இருந்தன. பண்டங்களை அடுக்கி வைத் திருக்கும் அமைப்பும், கடைகளின் தோற்றமும் சித்தி ரத்திலே அழகாக எழுதி வைத்தவற்றைப் போல இருந்தனவாம்.

என்று சங்ககாலத்தில் வாழ்ந்த புலவர் அந்தக் கடை வீதிகளைப் பாராட்டுகிறார். இப்படியே,

ളുഖ த் தன்ன இடனுடை வரைப்பில்

என்று புறநானூற்றில் ஒரு வீட்டை ஒரு புலவர் சிறப்பிக்கிறார். அழகு மிக்க இடங்களுக்குச் சித்திரத்தை உவமானமாகப் பல புலவர்கள் இவ்வாறு எடுத்துச் சொல்லி யிருக்கிறார்கள்.

மணிமேகலையில் கா வி ரி ப் பூ ம் பட்டினத்தில் இருந்த உபவனத்தைப் புலவர் வருணிக்கிறார், அடர்ந்த மரங்களில் பலநிற மலர்கள் பூத்துக் குலுங்கு கின்றன. அந்தக் கண்கொள்ளாக் காட்சியைப் பார்க்கிறபோது, ‘யாரோ மகா மேதாவியாகிய சித்திரக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/98&oldid=1286007" இலிருந்து மீள்விக்கப்பட்டது