பக்கம்:கன்னித் தமிழ்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழங் தமிழர் ஓவியம் 89

‘ஓவியச் செந்நூல்’ என்று குறித்தது சித்திரக் கலைக்குரிய இலக்கண நூலை. தமிழ் நாட்டில் அத்த கைய நூல்கள் பழங்காலத்தில் இருந்தன வென்றும், அழகுணர்ச்சி உடையவர்கள் அவற்றில் நல்ல பயிற்சி யைப் பெற்றிருந்தார்களென்றும் இதல்ை விளங்கு கின்றது.

சிலப்பதிகாரத்தில் ஓரிடத்தில் மாதவி யாழ் வாசிப் பதை அதன் ஆசிரியராகிய இளங்கோவடிகள் வருணிக்கிறார். பத்மாசனத்தில் இருந்து யாழைக் கையிலே வைத்துக் கொண்டு வாசிக்கும் அவள் கோலத்தைச் சொல்லப் புகுகையில், *

ஒன்பான் விருத்தியுள் தலைக்கண் விருத்தி நன்பால் அமைந்த இருக்கையள் ஆகி

என்று சொல்கிறார்,

‘ஒன்பது விருத்திகளுள் முதல் விருத்தி அமைந்த அமைப்பில் இருப்பாளாகி’ என்பது இதன் பொருள் விருத்தி யென்பது பரிபாஷை உட்கார்ந்திருக்கும் முறையை ஓவிய நூலிலும், நாடக நூலிலும் அவ்வாறு வழங்குவார்கள் என்று தெரிகிறது. இந்தப் பகுதிக்கு உரை எழுதவந்த அடியார்க்கு நல்லார்,

இதனுள் விருத்தி யென்பது இருப்பு. ஒவிய

நூலுள், கிற்றல் இருத்தல் கிடத்தல் இயங்குத

லென்னும் இவற்றின் விகற்பங்கள் பல உள’ என்று எழுதுகிறார், அதனோடு உட்காரும் முறை களாகிய விருத்தி ஒன்பது என்பதற்கு ஆதாரமாக ஒரு சூத்திரத்தை மேற்கோளாகக் காட்டுகிறார். அந்தச் சூத்திரம் பழைய தமிழ் ஓவிய நூல் ஒன்றில் இருப்ப தென்று தோற்றுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/97&oldid=613448" இலிருந்து மீள்விக்கப்பட்டது