பக்கம்:கன்னித் தமிழ்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

கன்னித் தமிழ்


வீட்டிலும், அவன் உபயோகிக்கும் பண்டங்களிலும் சித்திரங்களைப் பொறித்தான். மாடங்களுக்கு அழகு தருவன சித்திரங்கள்’ என்பது தமிழன் அறிந்த செய்தி.

பழங்காலத்தில், நடனமாடும் மகளிர் பல கலை களில் வல்லவராக இருந்தனர். அந்தக் கலைகளுள் ஒன்று சித்திரக்கலை. கோவலனுடைய காதலியாகிய மாதவி நுண்கலைத் தேர்ச்சி வாய்ந்தவள். கோவலன் இறந்த பிறகு அவள் தவநிலையை மேற்கொண்டாள். அதைக் கண்டு வசந்தமாலை யென்ற அவளுடைய தோழி மிகவும் வருத்தம் அடைந்தாள். மாதவியிடம் சென்று, “எல்லாவகையான கலைகளிலும் சிறந்த நீ, இந்த உலகத்து மக்களை யெல்லாம் அக் கலைகளால் இன்புறுத்தாமல், இப்படித் தவத்தை மேற்கொண் டாயே!” என்று சொல்கிருள். நடனம், பாட்டு, வீணை வாசித்தல் முதலிய பல கலைகளில் அவள் வன்மை யுடையவள் என்கிருள். எல்லாவற்றையும் சொல்லி விட்டு, நடனம் செய்யும் மகளிருக்கு அவசியம் இருக்க வேண்டுமென்று நன்றாக வகுக்கப்பெற்ற ஓவிய நூற்பொருள்களை யெல்லாம் கற்றுத் தேர்ந்த நங்கையாகிய நீ தவம்புரிவது நாணுவதற்குரியதென்று ஊராரெல்லாம் சொல்கிறார்களே!” என்று அங்கலாய்க் கிருள்.

நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த ஓவியச் செந்நூல் உரைநூற் கிடக்கையும் கற்றுத் துறைபோகிய பொற்றாெடி நங்கை நற்றவம் புரிந்தது நாணுடைத்து.

(மணிமேகலை, 2 : 30-33.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/96&oldid=1286006" இலிருந்து மீள்விக்கப்பட்டது