பக்கம்:கன்னித் தமிழ்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந் தமிழர் ஓவியம்

வாழ்வுக்கு இன்றியமையாத முதல் தேவை களாகிய உணவு, உடை, உறையுள் என்பவற்றை வேண்டிய அளவுக்குப் பெற்றுக் கொண்டால், மனிதன் அவற்றேடு நிற்பதில்லை. ஒவ்வொன்றிலும் பல வகை களை அமைத்துக் கொள்கிருன். இந்த மூன்றாேடு சம்பந்தப்பட்ட் பல அங்கங்களைப் பெருக்கிக் கொள் கிருன். நாகரிகம் ஓங்க ஓங்கத் தொழில்கள் பல்கு கின்றன. அந்தத் தொழில்கள் ஓங்க ஓங்கக் கலைகள் விரிகின்றன. கலைகளிலும் சித்திரம், சங்கீதம் முதலிய நுண்கலைகள் (Fine arts) நாகரிகத்தின் உச்சியை அடைந்த நாடுகளிலே மிகுதியாக வளர்ந்து வருவ தைக் காணலாம். -

உணவுக்கும் உடைக்கும் உறைவிடத்துக்கும் பஞ்சம் இல்லாமல் இருந்த பண்டைத் தமிழ்நாட்டிலே இத்தகைய நுண்கலைகள் மிகச் சிறப்பாக மேலோங்கி வளர்ந்தன. இன்றும் உலகம் புகழும் சிற்பச் செல் வங்களை அகத்தே உடைய திருக்கோயில்கள் பலவற் றைத் தமிழ் நாட்டிலேதான் காண்கிருேம். பெரும் போரின்றி மக்கள் அமைதியாக வாழ்ந்திருந்ததல்ை

கலைவளர்ச்சிக்குத் தடை ஒன்றும் நேரவில்லை.

தமிழன் அலங்காரப் பிரியன். சந்தனம் திமிர்ந்து பூச்சூடி அறுசுவை உண்டி நுகர்பவன். அவனுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/95&oldid=613442" இலிருந்து மீள்விக்கப்பட்டது