பக்கம்:கன்னித் தமிழ்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழங் தமிழர் ஓவியம் 95

‘இப்படி வந்தவர்கள் சுட்டிக் காட்டிக் கேட்கவும், தெரிந்தவர்கள் ஒவியத்தின் கருத்தைச் சொல்லவும் உயர்ந்த மலையில் விரிந்த பாறைகளில் விசாலமான இடத்தில் எழுத்து நிலை மண்டபத்தை அமைத்தமை யால், பரங்குன்றத்தில் முருகன் திருக்கோயிற் பக்கம் சோபன நிலையை உடையதாக இருக்கிறது’ என்று புலவர் கூறுகிறார்,

இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம் துன்னுநர் சுட்டவும் சுட்டறி வுறுத்தவும் தேர்வரை விரியறை வியலிடத்து இழைக்கச் சோபன நிலயது, துணிபரங் குன்றத்து மாஅல் மருகன் மாட மருங்கு. - பரிபாடலில் வரும் இந்தப் பாடலைப் பாடினவர்

நப்பண்ணனர் என்னும் புலவர்.

இவை யாவும், பழங்காலத்தில் ஓவியக் கலை எவ் வளவு சிறப்பான நிலையில் இருந்தது என்பதைத் தெரிவிக்கின்றன. - - - - - - - - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/103&oldid=612657" இலிருந்து மீள்விக்கப்பட்டது