பக்கம்:கன்னித் தமிழ்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒவிய வித்த கர்

தமிழ் நாட்டில் அறுபத்து. நான்கு கலைகளும் நன்றாக நிலைகொண்டு வளர்ந்தன என்பதை நூல் களின் வாயிலாக உணர்கிருேம். கலைகளுள் நுண் கலைகள் (Fine arts) என்று சிலவற்றைப் பிரித்து உரைப்பது மேல்நாட்டார் வழக்கம். அந்த நுண்கலை களுள் ஒன்று ஓவியக்கலை. எந்த நாட்டில் வாழ்க்கை வளம் பெற்று, நாகரிக நலம் உயர்ந்து சிறக்கின்றதோ அந்த நாட்டில் கலைவளம் ஓங்கி நிற்கும். கலைகள் பலவற்றுள்ளும் காவியமும் ஓவியமும் சிறப்பாகப் பயிலும் நாடு மிக உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும்.

தமிழ் நாட்டில் காவியப் புலவர்கள் பலர் இருந் தார்கள்; அவ்வாறே ஓவியப் புலவர்களும் இருந்தார் கள். கவிதைச் சுவையை நுகரும் ஆற்றல் படைத்த தமிழர் ஓவியச் சுவையையும் அறிந்து இன்புற்றார்கள். வாழ்க்கையிலே பொழுது போக்குக்காகக் கலைகளைப் பயில்வதும் அநுபவிப்பதும் பல நாட்டினர் வழக்கம். இந்த நாட்டில் வாழ்க்கையிலேயே கலைகள் இணைந்து - நிற்கும். x ஆதலின் பழந்தமிழரிற் பெரும்பாலோர்

கலைகளில் ஒரளவு பயிற்சி பெற்றிருந்தனர்.

வீட்டில் உள்ள மகளிருக்குப் பாடத் தெரியும்; சித்திரம் எழுதத் தெரியும். கடவுளை நாள்தோறும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/104&oldid=612660" இலிருந்து மீள்விக்கப்பட்டது