பக்கம்:கன்னித் தமிழ்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒவிய வித்தகர் 9?

இசை பாடித் துதித்தார்கள். அந்தத் தோத்திரம் தினசரிக் கடமைகளில் ஒன்று. விழாக் காலங்களில் பெண்கள் ஒன்றுகூடி, “வளைக்கரங்கள் தாம் ஒலிக்கக் கொட்டி இசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டு வேறு உண்டு. மாடமாளிகைகளில் வாழும் மக்கள் மாத்திரம் இப்படி இருந்தார்கள் என்று நினைக்கக்கூடாது; தொழில் செய்து பிழைப்பாரும் தங்கள் வாழ்க்கையிலே பாட்டுப் பாடி வாழ்ந்தார்கள்.

ஓவியக்கலையும் பொது மக்களின் உள்ளத்தைக் கவர்ந்தது. வீட்டுப் பெண்கள் தினந்தோறும் வாச லிலே இடும் கோலம் அவர்களிடத்திலும் ஓவியக்கலை யின் முளை உண்டென்பதைப் புலப்படுத்தும், குடிசை யிலும் குச்சிலும் வாழும் தொழிலாளர்கூடக் கூடையும் முறமும் விசிறியும் பின்னுவார்கள்; பாய் முடைவார் கள். அவற்றிலே சித்திரச் செய்கையைக் காணலாம். சின்னஞ் சிறு குழந்தைகளுக்குக் காசு போட்டுச் சித் திரப் பொம்மை வாங்கிக் கொடுக்கும் வழக்கம் நம் முடைய காலத்தது. பழங்காலத்தில் வாழ்க்கைத்

பண்டம் கிடைக்கும்.

ஏழைப்பெண் ஒருத்தி அழுகின்ற தன் குழந் தைக்கு அஞ்சு நிமிஷத்தில் கிலுகிலுப்பை பண்ணிக் கொடுத்து விடுகிருள். பனை ஓலையைக் கிழித்துச் சிறிய கற்களை உள்ளே வைத்து, அந்தக் கற்களைக் கொள் ளும் புட்டிலும் அதற்கு மேலே கையிலே பற்றிக் கொள்ளப் பிடியும் அமைத்து அற்புதமாகக் கிலுகிலுப் பையைப் பண்ணி விடுகிருள். இன்னும் வசதி உள்ள வளாக இருந்தால் சாயம் பூசிய ஓலையில் விதவிதமான கிலுகிலுப்பைகளைப் பண்ணித் தருகிருள்.

7.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/105&oldid=612662" இலிருந்து மீள்விக்கப்பட்டது