பக்கம்:கன்னித் தமிழ்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

கன்னித் தமிழ்


இன்றும் செட்டி நாட்டுப் பெண்டிர் முடையும் ஒலைப் பெட்டிகளின் அழகைக் கண்டவர்களுக்குத் தெரியும் அவற்றின் அருமை. கையிலே தென்னை ஒலை கிடைத்தால் பாம்பும், தாமரைப் பூவும், கிளியும், கிலு கிலுப்பையும் மிக விரைவிலே செய்து கொடுக்கும் வித்தை இன்றைய கிராமத்தாருக்குக்கூடச் சுலபமான காரியம்.

தையல் வேலைகளிலே வீட்டுப் பெண்கள் கலைத் திறம் காட்டிய காலம் முன்பு. இப்போது யந்திரத்தை நம்பி வாழ வேண்டி வந்துவிட்டது.

பொது மக்களே ஓரளவு கலைத்திறம் படைத்தவர்க ளானல் அவர்களுக்குள்ளே சிறந்த புலவர்கள் எவ் வளவு வல்லவர்களாக இருக்க வேண்டும் சில பெண்கள் வீட்டுச் சுவர்களில் விதவிதமாகச் சித்தி ரத்தை எழுதுவார்கள். சுண்ணும்பும், செம்மண்ணும், கரியும், மஞ்சளும், இலைச்சாறுமே அவர்களுடைய வண்ணப் பொருள்கள். அவற்றைக் கொண்டு நாகப் பின்னல்களும், கோட்டை கொத்தளங்களும் எழுதி விடுவார்கள். கிழிந்த துணிகளைக் கொண்டு கிளியும் குருவியும் செய்து குழந்தைகளின் தொட்டிலுக்கு மேலே தொங்க விடுவார்கள்.

இவ்வாறு ஓவியக்கலை பல்வேறு வகையில் வாழ்க் கையிலே கலந்து பொதுமக்களின் கையிலே பழகி விளங்கியது. அவர்களுக்கு மேலாக, கலையையே தங் கள் வாழ்க்கையின் தலைமைத் தொழிலாகக் கொண்ட வர்களைப் புலவர்கள் என்று போற்றினர்கள். தங்கள் தங்கள் வீட்டிலே பெண்கள் சமைத்துக் கொண்டால் அது வாழ்க்கை, பல பேருக்கு ஒருவர் உணவு சமைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/106&oldid=1286010" இலிருந்து மீள்விக்கப்பட்டது