பக்கம்:கன்னித் தமிழ்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒவிய வித்தகர் 99

தால் அது உத்தியோகம். தங்கள் வீட்டில் நடக்கும் கல்யாணத்திலே பாடினலும், கடவுளே வணங்கும் போது பாடிலுைம் அவை வாழ்க்கைப் பகுதியாகி விடுகின்றன. பல்லோர் கூடும் சபையிலே பாடினல் தொழிலாகிறது. முன்னது பொதுமக்கள் வேலை; பின்னது கலைஞர் வேலை.

அந்த முறையில், தமக்கென்று பயன்பட ஒரளவு ஓவிய வகையில் பயிற்சி பெற்றுடவாழ்ந்தவர் தமிழர். பலருக்குப் பயன் படும்படியாக வாழ்க்கைத் தொழிலாக ஓவியக்கலையைக் கொண்டவர் ஓவியப் புலவர்.

ஒவியப் புலவரில் பல வகையினர் உண்டு. சுவரி லும் கிழியிலும் வண்ணங்கொண்டு ஓவியம் வரையும் ஒவியர் ஒருவகை. சுண்ணம் கொண்டும், வண்ணம் கொண்டும் பாவை அமைப்பார் ஓரினம். கல்லிலும் மரத்திலும் நெட்டியிலும் உருவம் அமைப்பார் ஒரு குழுவினர். உலோகத்தால் அமைந்த பாத்திரங் களிலும், பொன்னணிகளிலும் சித்திரம் பொறிப்பார் ஒரு வகையினர். இவர்களை யெல்லாம் வித்தகர் என்ற சொல்லால் பழந் தமிழ் நூல்கள் குறிக்கின்றன.

ஒவியர், சித்திரகாரிகள், கண்ணுள் வினைஞர், கண்ணுளார் என்று ஓவியப் புலவர்களுக்குப் பெயர்கள் வழங்கும்.

வித்தகக் கலையாகிய ஒவியத்தில் வல்லுநர்களாக இருந்தமையின் வித்தகர் என்ற பெயர் வந்தது.

வித்த்கர் இயற்றிய கண்கவர் ஒவியம் என்று மணிமேகலையிலும், -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/107&oldid=612668" இலிருந்து மீள்விக்கப்பட்டது