பக்கம்:கன்னித் தமிழ்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒவிய வித்தகர் 101

அலங்காரங்களோடு ஓவியர் வனையும் உருவமாகத் தோற்றவில்லை. ‘இப்படி ஓர் உருவத்தை ஒவியன் கற்பனை செய்தானே, அவன் கருத்து என்ன?’ என்று சிறிது நேரம் உதயகுமரன் யோசித்து நின்றாளும்.

- ஓவியன் உள்ளத்து உள்ளியது வியப்போன்

என்று மணிமேகலை ஆசிரியர் சொல்கிறார், ஓவியன் உள்ளத்தே நன்றாகச் சிந்தித்துத் தன் கலைத்திறமை யைக் காட்ட வேண்டுமென்ற உண்மையை இந்த

அடி தெரிவிக்கின்ற து.

வண்ணமும் கிண்ணமும், தூரிகையும் கிழியும், கையும் கண்ணும் மாத்திரம் இருந்தால் ஓவியம் வந்து விடாது. சிந்தசைக்தி மிகவும் அவசியம். இதனைக் கம்பர் அழகாகச் சொல்கிறார்.

சீதா பிராட்டியின் அழகைச் சொல்ல வருகிறார் அப்பெரும் புலவர். அவளுடைய திருமேனி அழகு நாவினுல் வருணிக்க ஒண்ணுதது. அந்தப் பேரழகி யைப் பார்த்தபோது மன்மதனுக்கு அப் பெருமாட்டி யின் திருவுருவத்தை எழுத வேண்டுமென்று ஆர்வம் உண்டாயிற்றாம். இந்த ஆதரம் எழவே, சித்திரம் எழுதுவதற்கு வேண்டிய கருவிகளைச் சேகரிக்கத் தொடங்கினன். சாமானிய மாதர்களைப் போன்றவளா சீதை அவளை எழுதுவதற்கு உலகத்திலே கிடைக் கும் வண்ணங்கள் பயன்படா. ஆகவே அமுதத் திேைல வண்ணக் கலவைகளை உண்டாக்கிச் சீதை யின் சித்திரத்தைத் தீட்ட வேண்டுமென்று எண்ணி ன்ை. அமுதத்தைக் கிண்ணங்களிலே நிரப் பிக் கொண்டான்; வண்ணங்களையும் வைத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/109&oldid=612674" இலிருந்து மீள்விக்கப்பட்டது