பக்கம்:கன்னித் தமிழ்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

கன்னித் தமிழ்


கொண்டான். நல்ல எழுது கோலாகத் தேர்ந்

தெடுத்தான். கையிலே கோல் பிடித்து அமுதத்திலே தோய்த்தான்.

இந்தப் புறக்கருவிகள் இருந்தாலே போதும் என்று மன்மதன் நினைத்து விட்டான். சாதாரணமாக ஒரு சித்திரம் வரைய வேண்டுமென்றாலே, முதலில் சிந்தனையை எழுப்பிக் கற்பனையிலே படரவிட வேண்டும். யார்க்கும் எல்லை காணரிய பேரழகியைச் சித்திரிக்க வேண்டுமானல் எவ்வளவு காலம் சிந்திக்க வேண்டும்? அவளுடைய புறஎழில் மாத்திரம் கண் ணுக்குத் தெரிந்த அளவிலே அமைத்தால் போதுமா? வேறு ஒர் அழகியின் உருவத்தை அமைத்துவிடலாம். ஆல்ை உள்ளும் புறமும் பேரழகு படைத்த அப் பெருமாட்டியைச் சித்திரத்திலே தீட்ட வேண்டுமானுல் அகமும் புறமும் ஆராயும் சிந்தனையும் கண்ணும் உடையாரே செய்யத் துணிய வேண்டும்.

காமன் அழகுலகத்தின் தெய்வம் என்ற அகங்கா ரத்தினால், யாருக்கும் கிடைக்காத அமுதத்தையே வண்ணக் குழம்பாகப் பெற்ற செருக்கினுல், சீதையை எழுத உட்கார்ந்தால் வருமா? ஒவ்வோர் அவயவ மாகச் சித்திரிக்கலாமென்றால் அந்த அவயவத்தோடு பொருந்திய நிகழ்ச்சிகள், அந் நிகழ்ச்சியூடே வெளிப் படும் சீதையின் தனிச்சிறப்பு முதலியவற்றைச் சிந்திக்க வேண்டாமா? முதலில் மிக்க பக்தியுடன் உள்ளமாகிய கிழியைத் தூயதாக்கிக்கொண்டு அங்கே சிந்தனையாலே உருவெழுதிக் கற்பனை யாலே வண்ணந் தீட்டிப் பிறகல்லவா கிழியிலே அமைக்க முந்த வேண்டும்? அப்போதுதானே அது கலை ஆகும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/110&oldid=1286012" இலிருந்து மீள்விக்கப்பட்டது