பக்கம்:கன்னித் தமிழ்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒவிய வித்தகர் 103

காமன் வெறும் தொழிலாளியைப்போல ஆரம் பித்தான். கோடரியைக் கொண்டு விறகு பிளப்பவன் தொழிலாளி; அவன் சிந்தனை வேலை செய்யவில்லை. அவன் தூங்கிக் கொண்டே மரம் பிளக்கலாம். சேகேறிய மரத்திலே உருவம் செதுக்கும் சிற்பக் கலைஞனே, சிந்தனை செய்கிருன், உளியை இயக்கு வதற்கு முன் உள்ளத்தை இயக்குகிருன்.

மன்மதன் விறகு பிளக்கிற தொழிலாளியைப் போல, வெறும் கருவிகளின் பலத்தினலே இந்தக் காரியத்தைச் சாதித்து விடலாம் என்று முந்துகிருன். அது நடக்கிற காரியமா? கோலை அமுதில் தோய்த்து எழுதப் போனுல் ஓடவில்லை. உள்ளத்தே ஒளி உண் டானல் அது புறத்தே சுடரும். இவன்தான் உள்ளக் கதவைச் சாத் தி விட்டானே! அங்கே இருள்தான் படியும்; மயக்கந்தான் உண்டாகும்; திகைப்புத்தான் ஏற்படும். அமுதத்தையும் கோலையும் கொண்டு சீதையை எழுதப் புகுந்த மன்மதன், எப்படி எழுதுவது என்று திகைக்கிருளும்.

ஆதரித்து அமுதில் கோல்தோய்த்து

அவயவம் அமைக்கும் செய்கை யாதெனத் திகைக்கும் அல்லால்

மதனற்கும் எழுத ஒண்ணுச் சீதை

என்பது கம்பர் பாட்டு.

மன்மதன் வித்தககை இருந்தால் சீதையின்

சித்திரத்தைத் தீட்டிவிடலாம். சிந்தனை செய்யும் வித்தகர்க்கே உரியது ஓவியக்கலை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/111&oldid=612683" இலிருந்து மீள்விக்கப்பட்டது