பக்கம்:கன்னித் தமிழ்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

கன்னித் தமிழ்


கம்பர் பின்னும் ஓரிடத்தில் ஓவிய வித்தகன் சிந்தனையாளனுக இருக்க வேண்டுமென்று சொல் கிறார் கண்ணுலே பொருளை நன்கு பார்த்து அப்பால் அதை உள்ளத்திலே வடித்து அதன்மேல் கற்பனை யாலே மெருகேற்றும் கலைஞன்தான் சிறந்த ஒவியங் களை எழுதமுடியும். வெறும் கையும் தூரிகையும் இருந்தால் போதா என்று சொல்கிறார்.

கருத்து இலான் கண் இலான் ஒருவன்

கைகொடு திருத்துவான் சித்திரம் அனைய

செப்புவாய்

என்பது மந்திரப் படலத்தில் வரும் பாட்டு.

சிந்திக்கும் கருத்து இல்லாதவன் ஓவியனுக முடியாது. கருத்திலே பதியும் வண்ணம் பார்க்கும் கண் இல்லாதவன் சித்திரம் எழுத முடியாது.

ஓவிய வித்தகன் நன்றாகப் பார்த்துப் படம் பிடிக்கும் கண்ணை யுடையவனுய், அதனைச் சிந்தித்துச் சிந்தித்துப் பதியவைக்கும் கருத்துடையவளுய், கலைப் பண்பு துளும்ப ஒவியத்தை அமைக்கும் கற் பனைத் திறம் உடையவனுய் இருக்கவேண்டும். இதைப்

பண்டைப் புலவர்கள் நன்கு உணர்ந்திருந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/112&oldid=1286013" இலிருந்து மீள்விக்கப்பட்டது