பக்கம்:கன்னித் தமிழ்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க லே இ ன் ப ம்

ஒருவர் வீட்டில் நன்றாக வைரம் ஏறிய கருங்காலிக் கட்டை ஒன்றை ஒரு நண்பர் கொண்டு வந்து போட் டிருந்தார். நல்ல பெரிய கட்டை. ஒரு பாட்டி அங்கே வந்தாள்; அந்தக் கட்டையைப் பார்த்தாள். ‘எவ்வளவு பெரிய கட்டையாக இருக்கிறது! அதுவும் சேகு எறிய கட்டைபோல் இருக்கிறது. இதைப் பிளந்தால் ஒரு மாதத்துக்கு வெந்நீர் போடலாமே!” என்றாள்.

அடுத்தபடியாக அங்கே ஒரு தச்சன் வந்தான். மரத்தைத் தட்டிப் பார்த்தான். ‘நல்ல கருங்காலிக் கட்டையாக இருக்கிறதே மேஜை, நாற்காலி, அல மாரி எல்லாம் செய்யலாமே!’ என்றான்.

இன்னும் சிறிது நேரம் கழித்து மற்றாேர் ஆசாரி யார் வந்தார். அவர் மரச் சிற்பி, கடைசல் வேலை செய்கிறவர். இந்தக் கட்டை கண்ணிலே பட்டவுடன், ‘ஹா ஹா!’ என்று ஆச்சரியப்பட்டுப்போர்ை. கட் டைக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு தட்டிப்

மரம்; சேகு ஏறின மரம். ஒரே சீராக இருக்கிறது. இந்தமாதிரி மரம் கிடைக்கிறது மிகவும் அருமை. ராமாயணத்தில் வரும் பாத்திரங்களையெல்லாம் ஒரே மரத்தில் பொம்மையாகப் பண்ணவேண்டும் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/113&oldid=612689" இலிருந்து மீள்விக்கப்பட்டது