பக்கம்:கன்னித் தமிழ்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

கன்னித் தமிழ்


நினைத்திருந்தேன். அதற்கு வாகான கட்டை இது’ என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்.

கட்டை உங்களுடையதாக இருந்தால் யாருக்குக் கொடுப்பீர்கள்? நிச்சயமாகச் சிற்பிக்குத்தான் தருவீர் கள். ஏன்? அவர் அதை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வார் என்று நமக்குத் தோன்றுகிறது. விறகாக எரிப்பதைக் காட்டிலும், மேஜை, நாற்காலியாகப் பண்ணுவது சிறந்தது; அதைவிடப் பொம்மைகளாகப் பண்ணுவது மிகமிகச் சிறந்தது என்று நாம் எண்ணுகிருேம். மூன்றுக்கும் உள்ள வேறுபாடு என்ன? அதைச் சற்று ஆராய்வோம். - -

பாட்டி அந்தக் கட்டையைப் பொசுக்கிச் சாம்ப லாக்கி விடுவதிலே நோக்கமுடையவளாக இருந்தாள். கண்ணுலேயே அதைப் பொசுக்கி விட்டாள் என்றே சொல்லவேண்டும். அவள் அழிவு வேலைக்காரி. அவ ளைப்பற்றி நமக்குக் கவலை இல்லை. மற்ற இரண்டு பேரும் அதை உண்மையாகவே பயன்படுத்திக் கொள்ள எண்ணினவர்கள். அவர்களுக்குள்ளே வேறு பாடு இருக்கிறது. மேஜை நாற்காலி செய்கிறவன் ஒரு மாதம் முயன்று அந்தக் கட்டையிலிருந்து அவற் றைச் செய்துவிடுவான். ஆளுல் ராமாயணப் பொம்மை செய்கிறவர் அவ்வளவு விரைவிலே செய்ய மாட்டார். பல மாதங்கள் வேலைசெய்து கடைசல் பிடித்து நுட்ப மாகச் செதுக்கிச் செய்யவேண்டி யிருக்கும். இதல்ை மேஜை நாற்காலி செய்து விற்கும் தச்சனைக் காட்டி லும் சிற்ப உருவங்களாகச் செய்து விற்கும் சிற்பிக்கு

அ திகப் பணம் கிடைக்கு ம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/114&oldid=1286014" இலிருந்து மீள்விக்கப்பட்டது