பக்கம்:கன்னித் தமிழ்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலை இன்பம் - 10?

இந்த வேற்றுமைக்கு அடிப்படையான காரணம் தச்சன் செய்வது தொழில், சிற்பியின் வேலையோ கலை என்பதுதான்; தொழிலாளியின் படைப்பைக்காட்டிலும் கலைஞனின் படைப்பு மிகமிக உயர்ந்தது. தொழிலாளி கருவிகளையும் கையையும் அதிகமாகவும் அறிவைக் குறைவாகவும் உபயோகப்படுத்திப் பண்டங்களை உண்டாக்குகிருன். கலைஞன் கையையும் கருவிகளையும் விட அதிகமாக அறிவையும் கற்பனையையும் பயன் படுத்துகிருன். அதனுல்தான் கலைப் பொருளுக்கு மதிப்பு அதிகமாக இருக்கின்றது. கருவியும் கையும் எல்லோரிடமும் இருக்கின்றன. கருத்தும் கற்பனையும் அருமையாகவே இருக்கின்றன.

மேஜை நாற்காலிகளைவிடச் சிற்ப உருவங்களுக்கு என்ன உயர்வு வந்துவிட்டது? இரண்டு வகைப் பொருள்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

மேஜை நாற்காலிகள் கருவிகளாகப் பயன்படு: கின்றன. அதாவது மனிதன் உட்காரவும் எழுதவும் பயனுகின்றன. கருவியைப் பயன்படுத்த மக்கள் இல்லாதபோது அவற்றை யாரும் மதிக்கமாட்டார்கள். மேஜை ஒரு காரியத்துக்குப் பயன்படும் கருவியாக இருக்கிறது. ஆனல் சிற்ப உருவங்களைக் கருவியாகக் கொண்டு வேறு ஒன்றைச் செய்வதில்லை. அவற். றையே பார்த்துப் பார்த்து மகிழ்ச்சி அடைகிருேம். மேஜையைப் பார்த்து மகிழ்வதைக் காட்டிலும் அதை உபயோகப்படுத்தி மகிழ்வதுதான் பெரிதாக இருக் கிறது. சிற்ப உருவங்களை வேறு ஒரு காரியத்துக்குப் பயன்படும் கருவிகளாக உதவுமென்பதற்காக அன்றி, அவற்றைக் கண்ட அளவிலே ஆனந்தமடைகிருேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/115&oldid=612695" இலிருந்து மீள்விக்கப்பட்டது