பக்கம்:கன்னித் தமிழ்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

கன்னித் தமிழ்


அப்படி ஆனந்தம் அடைவதற்குக் காரணம் நுட்பமானது. ராமாயண உருவங்களே அந்தச் சிற்பி அமைத்து விட்டான் என்றே வைத்துக் கொள்வோம். நவராத்திரிக் கொலுவில் அத்தனை பொம்மைகளையும் வைக்கிறார்கள்; நாம் பார்க்கிருேம். அதைப் பார்ப்ப தல்ை மாத்திரம் நமக்கு இன்பம் வராது. அந்தப் பார்வையில்ை நம்முடைய உள்ளத்திலே சில எண் ணங்கள் கிளர்ந்து எழுகின்றன. ராமனையும் ராவண னையும் அநுமனயும் சீதையையும் போல அமைத்த திருவுருவங்களைக் காணும்போது நாம் படித்த ராமா யணக் கதை நம் அகக்கண்முன் வந்து நிற்கிறது. ராமனுடைய குணங்களும் மற்றவர்களுடைய இயல்பு களும் நினைவுக்கு வருகின்றன. ராமாயணத்தில் அதிக மாக ஈடுபட்டவராக இருந்தால் இந்த உருவங்களைக் கண்டு அளவற்ற மகிழ்ச்சியை அடைவார். முன்பே ராமனையும் மற்றவர்களையும் எண்ணி இன்புற்ற உள்ளத்துக்கு அந்த இன்ப உலகத்தைத் திறந்து காட்டும் திறவுகோல் போல இந்தப் பொம்மைக் காட்சி உதவுகிறது. அவற்றைக் கண்டவுடன் நாம் வேறு ஓர் உலகத்துக்குப் போய்விடுகிருேம். இப்போது நிற்கும் காலத்தையும் இடத்தையும் மறந்து வேறு காலத்துக்கு, வேறு இடத்துக்குப் போய் நிற்கிருேம். காசு கொடுத்து வண்டியில் ஏறினல் வேறு இடத் துக்குப் போக இயலுமென்பது நாம் அறிந்தது. வான விமானத்தில் ஏறில்ை நெடுந்தூரத்தில் உள்ள இடத்துக்கு விரைவில் போய்விடலாம். ஆனல் எந்த விதமான வாகனமும் நம்மை வேறு காலத்துக்குக் கொண்டுபோக முடியாது. கலைப் பொருள்கள் நம்மை வேறு இடத்துக்கு வேறுகாலத்துக்குக் கொண்டுபோய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/116&oldid=1286015" இலிருந்து மீள்விக்கப்பட்டது