பக்கம்:கன்னித் தமிழ்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

கன்னித் தமிழ்


நாடெங்கும் சென்று ரசிகர்களிடமும் செல்வர்களிட மும் தங்கள் இசைத் திறமையைக் காட்டிப் பரிசு பெறுவார்கள். இன்னிசை யாழை வாசித்து மக்களை மகிழ்விப்பார்கள்.

அவர்கள் ஊர் ஊராகப் போய்க்கொண்டிருக் கிறார்கள். யாரோ ஒரு வள்ளலைக் காண்பதற்காகப் போகும்போது வழியிலே ஒரு பாலை நிலம் இருக் கிறது. பயிர் பச்சை ஒன்றும் இல்லாமல் எங்கே பார்த்தாலும் வெறிச்சோடிக் கிடக்கும் இடம் அது. அங்கே சிலர் வசிக்கிறார்கள். அவர்கள் எப்படி ஜீவனம் செய்வது? வழிப் பிரயாணிகளைக் கொள்ளை அடித்து, அதனுல் கிடைத்ததைக் கொண்டு பிழைத்து வருகி. ருர்கள். இந்த வழிப்பறிக்காரர்களை ஆறலை கள்வர். என்று சொல்வார்கள்.

மேலே சொன்ன பாணர்கள் நாலைந்து பேராகச் சேர்ந்து பாலை நிலத்தின் வழியே வருகிறார்கள். அவர் களுடன் பாட்டுப் பாடும் பெண்மணிகளும் வருகிறார் கள். வெப்பமான அந்தப் பிரதேசத்தில் நடந்து வருகிறார்கள். நெடுந் தூரத்தில் அவர்கள் வரும் போதே பேச்சரவம் கேட்கிறது. அது கேட்ட ஆறலை கள்வர்கள், ‘இன்று நமக்குப் பெரிய வேட்டை கிடைக்கப் போகிறது” என்று மகிழ்ச்சி அடைகிறார்கள். பாணர்கள் நெருங்கி வருகிறார்கள். அருகில் வந்த வுடன் கள்வர்கள் திடீரென்று அவர்களை மடக்கிக் கையில் இருப்பதைக் கீழே வைக்கச் சொல்லுகிறார்கள்.

பெண்கள் நடுங்குகிறர்கள். பாணர்களில் சிலர், “எங்களிடத்தில் ஒன்றும் இல்லை ஐயா! நாங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/118&oldid=1286016" இலிருந்து மீள்விக்கப்பட்டது