பக்கம்:கன்னித் தமிழ்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலே இன்பம் 111

பாட்டுப் பாடிப் பிச்சை எடுக்கிறவர்கள்’ என்று சொல்கிறார்கள்.

‘பாட்டா? எப்படிப் பாடுவீர்கள்?’ என்று கள்வர் பரிகாசமாகக் கேட்கிருச்கள்.

ஒரு பாணன் தன் யாழைச் சுருதி கூட்டிப் பாடத் தொடங்குகிருன். இன்ன காலத்தில் இன்ன் ராகத்தைப் பாடவேண்டும் என்ற வரையறை உண்டு. பாலை நிலைத் தில் எரிக்கும் வெயிலில் பாலைப் பண்ணைப் பாடத் தொடங்குகிருன் பாணன். அவன் பாடப் பாடப் பாலை வன நினைவு அந்தப் பாணனுக்கே மறந்து போகிறது. கையில் ஆயுதங்களுடன் வந்த ஆறலை கள்வர்களின் காதுவழியாக அந்தச் சங்கீதம் சென்று அவர்கள் கருத் தைக் கவர்கிறது. அவர்களும் மெல்ல மெல்லத் தங் களை மறக்கிறார்கள். அவர்கள் கையிலே வைத்திருந்த ஆயுதங்கள் தாமே நழுவிக் கீழே விழுந்துவிடுகின் றன. கள்வர்களும் இரு த ய ம் உள்ளவர்களே அல்லவா? அவர்களிடத்தில் அன்பு மறைந்து நின் றது. மனிதப் பண்பு மங்கி மறைந்திருந்தது. இசை அவற்றை வெளிப்படுத்தியது. கொடிய இயல்பை மறந்து கேட்டார்கள். அவர்களிடத்தே இருந்த கொடிய குணத்தையும் அப்போதைக்கு நழுவும்படி செய்து விட்டது அந்தப் பாலைப் பண்.

பாணன் பாட்டை நிறுத்தின்ை. கள்வர்கள் தம் நினைவு பெற்றார்கள். பாணர்களிடம் கொள்ளையடிக்க வந்தவர்கள் அவர்கள். இப்போது இசையிலேயே மனத்தைப் பறிகொடுத்துத் தங்கள் கையில் கொஞ்ச நஞ்சம் இருந்த உணவுப் பொருள்களைக் கொடுத்து, ‘ஜாக்கிரதையாகப் போய் வாருங்கள்’ என்று வழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/119&oldid=612708" இலிருந்து மீள்விக்கப்பட்டது