பக்கம்:கன்னித் தமிழ்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

கன்னித் தமிழ்


யனுப்பினர்கள். இந்தக் காட்சியை மிகச் சுருக்க மாக அந்தச் சங்கப் புலவர் சொல்கிறார்,

ஆறலே கள்வர் படைவிட், அருளின் மாறுதலே பெயர்க்கும் மருவின் பால்

என்று பாடுகிறார். வழிப்பறிக்காரர் தம் கையிலே

உள்ள ஆயுதங்களை நழுவ விடும்படியாக, அவர்களி டத்தே உள்ள அருளுக்கு மாறுபட்டதாகிய கொடு

மையை மாற்றும், அநுபவிப்பதற்கு இனிய பாலைப்

பண்ணைப் பாடும் யாழ்’ என்று இதற்குப் பொருள்.

கலை தன்னை மறக்கச் செய்யும் என்பதை இந்தப் பாடலும் தெரிவிக்கிறது.

? தன்னை மறப்பது இன்பம். தன்னை மறந்து இறைவனை நினைப்பது பேரின்பம். ஞான நெறி இதைக் காட்டுகிறது. தன்னை மறக்கும் இன்பத்தைத் தருவது கலையின் பொது இலக்கணம். எல்லா நாட்டுக் கலைக்கும் பொது இது. ஆல்ை இந்திய நாட்டுக் கலையோ தன்னை மறந்து தலைவனுகிய கடவுளை நினைக் கச் செய்கிறது. ஞானியும் கலைஞனும் ஒரே காரியத் தைச் செய்கிறார்கள். ஞானி தன்னை மறந்து கடவுளை நினைந்து ஒன்றுகிருன் கலைஞன் ஒருபடி மேலே போகிருன். தன்னை மறந்து கடவுளோடு தான் ஒன்று வதை அன்றி, மற்றவர்களையும் தம்மை மறந்து இறை வைேடு ஒன்றச் செய்து விடுகிருன். இந்த நாட்டுச் சிற்பிகள் ஞானியர் கூட்டத்தைச் சேர்ந்தவர்களே. ஞானசம்பந்தர் முதலியவர்களும் ஆழ்வார்களும் கவிக் கலைஞர்கள்; அதோடு ஞானிகளாகவும் விளங்கி ஞர்கள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/120&oldid=1286017" இலிருந்து மீள்விக்கப்பட்டது