பக்கம்:கன்னித் தமிழ்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாத்தியார் ஐயா

Í

‘ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி; அதற்கும் இளைத்தவன் பள்ளிக்கூடத்து வாத்தியார் என்ற பழமொழி இக்காலத்தில் எங்கும் வழங்குகிறது. இந்தப் பழமொழி ஏதோ நடுவில் வந்த புதுமொழி என்றுதான் தெரிகிறது. ஏனென்றால் நம்முடைய தேசத்தில் கோயில் பூசகர்களையும் உபாத் தியாயர்களையும் இழிவாக நினைக்கும் வழக்கம் பழங் காலத்தில் இல்லை. கோயில் ஒவ்வோர் ஊருக்கும் அவசியம் என்று பழந்தமிழர்கள் நினைத்தார்கள்.

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது ஒரு பழமொழி.

“திருக்கோயில் இல்லாத திருவில் ஊர்’ என்று அப்பர் சுவாமிகள் சொல்கிறார், கோயில் இல்லாத ஊரில் திருமகளின் விலாசம் இராதாம். அதை மூதேவி பிடித்த ஊர் என்றே சொல்ல வேண்டுமாம். இந்த மாதிரியே வாத்தியார் இல்லாத ஊரும் பிரயோசனம் அற்றது என்று சொல்லி யிருக்கிறார்கள்.

கணக்காயர் இல்லாத ஊரும்......... ஆன்மை பயத்தல் இல

என்று ஒரு பழைய நூல் சொல்கிறது. உபாத்தியாய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/127&oldid=612735" இலிருந்து மீள்விக்கப்பட்டது