பக்கம்:கன்னித் தமிழ்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாத்தியார் ஐயா Í 31 களுடைய சம்பளந்தான். மற்ற உத்தியோகஸ்தர் களெல்லாம் தொப்பியும் நிஜாரும் அணிந்துகொண்டு டாக் டீக்கென்று உலவும் உலகத்தில் மூலைக்கச்சத்தை யும் அங்கவஸ்திரத்தையும் ஈசல் சிறகை விரித்துப் பறப்பதுபோலப் பறக்க விட்டுக்கொண்டு செல்லும் வாத்தியார் ஐயா நிலை பரிதாபகரமானதுதான்.

பழைய காலத்தில் வாத்தியார் ஐயா இப்படி இருக்கவில்லை. அவர் ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞர் கூட்டத்துக்குத் தலைவர்; எதிர்கால சந்ததி களுக்கு அவரே கடவுள்.

“எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்’ என்று அதிவீர ராம பாண்டிய மன்னர் சொல்லுகிறார். இறைவன் போன்றவன் என்று சொல்லாமல் இறை வனே ஆவான் என்று சொல்லிவிட்டார். அகக் கண்ணைத் திறந்து வைக்கும் தெய்வம் அவன்தானே? தெய்வம் என்று சாமான்ய மனிதனைக் கண்டால் நமக்கு மதிக்கத் தோன்றுகிறதா? ஊரார் எல்லோரும் ஒரு மனிதனை அப்படி மதிக்க வேண்டுமானல் அதற்கு ஏற்ற காரணம் இருக்க வேண்டும். அந்த மனித ளிைடத்தில் அதற்கு ஏற்ற குணங்களும் ஆற்றலும் இருந்தால்தான் மக்களுடைய மதிப்பு நிரந்தரமாக இருக்கும். இல்லாவிட்டால் வெறும் சம்பிரதாயத் துக்காக உபாத்தியாயருக்குப் பூசை செய்யும் நிலை தான் வரும்.

வாத்தியார் ஐயா எப்படி இருந்தார்? எப்படி இருந்தால் வாத்தியார் ஐயா என்ற பட்டம் கொடுக் கலாம்? அவர் குணம், பழக்க வழக்கங்கள், கல்வி,

சொல்லிக் கொடுக்கும் முறை முதலியவைகளின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/129&oldid=612741" இலிருந்து மீள்விக்கப்பட்டது