பக்கம்:கன்னித் தமிழ்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

கன்னித் தமிழ்


இயல்பு என்ன?-இந்த விஷயங்களைத் தமிழர்கள் ஆராய்ந்திருக்கிறார்கள். அநேகமாக இலக்கண நூல் ஒவ்வொன்றிலும் ஆரம்பத்தில் இந்த விஷயங்களைத் தெரிவித்திருக்கிறார்கள். இலக்கணத்தில் பொதுப் பாயிரம் என்ற ஒரு பகுதி வருகிறது. அங்கே புத்தகம் எப்படி இருக்க வேண்டும், அதைச் சொல்லிக் கொடுக்கும் வாத்தியார் ஐயா எப்படி இருக்க வேண்டும், அவர் எப்படிப் பாடம் சொல்ல வேண்டும், மாணுக்கன் எப்படி இருக்க வேண்டும், எப்படிப் படிக்க வேண்டும் என்ற விஷயங்கள் வருகின்றன. இவற் றைப் பற்றிய விரிவான இலக்கணங்களைச் சொல்லும் சூத்திரங்களைப் பழைய நூல்களிலிருந்து உரையாசிரி யர்கள் எடுத்துக் காட்டுகிறர்கள். அவற்றைக் கொண்டு, வாத்தியார் ஐயாவைப்பற்றித் தெரிந்து கொள்ளக்கூடிய விஷயங்களை இனிப் பார்க்கலாம்.

2

வாத்தியார் முதலில் நல்ல மனிதராக இருக்க வேண்டும். நற்குண நற்செய்கைகள் உடையவராக இருந்தால்தான் பொது மக்களுடைய மதிப்புக்குப் பாத்திரராக முடியும். “நான் சொல்வதை மாத்திரம் கேள்; நான் செய்வதைக் கவனிக்காதே’ என்றால் வாத்தியார் ஐயாவை ஒரு வாரத்தில் ஊரார் அவமா னப்படுத்தி அனுப்பிவிடுவார்கள். நல்ல ஒழுக்கமும் நல்ல பழக்கங்களும் இருப்பதற்கு, அவர் நல்ல மனிதர் களுடைய குடும்பத்தில் பிறந்திருக்க வேண்டும்; இல்லாவிட்டால் நல்ல குருவினுடைய பழக்கத்தை உடையவராக இருக்க வேண்டும். இவ்வளவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/130&oldid=1286021" இலிருந்து மீள்விக்கப்பட்டது