பக்கம்:கன்னித் தமிழ்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாத்தியார் ஐயா Í 23.

சேர்ந்த ஒரு தகுதியை, குலன்’ என்று ஆசிரியர்கள் குறிக்கிறார்கள்.

ஆசிரியரைத் தெய்வமாகக் கருதவேண்டுமென்று சொன்னர்களே, அதற்கு ஏற்றவாறு ஆசிரியருக்கும் தெய்வத்தின் குணம் இருக்க வேண்டும் அல்லவா? தெய்வத்துக்கு என்ன என்னவோ விசேஷ குணங்கள் இருப்பதாக வேத சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. பக்தர்களுக்கு அவற்றைப்பற்றிக் கவலை இல்லை. கடவுள் நம்முடைய பிரார்த்தனைக்கு இரங்கி அருள் புரிய வேண்டுமென்ற ஒன்றுதான் அவர்களுடைய நோக்கம். அருள் என்னும் குணம் இருப்பதனால் தான் தெய்வத்தை நாம் கொண்டாடுகிருேம்; சிற்று யிர்க்கு இரங்கும் பேரருளாளன் என்று பாராட்டு கிருேம். குருவுக்குத் தெய்வத்தைப்போன்ற மதிப்பு வேண்டுமானுல் அவரிடமும் அருள் இருக்க வேண்டும். பிறருக்கு உபகாரம் செய்ய வேண்டும்ென்ற நினைவு அருளிலிருந்து பிறப்பதே அறியாமை நிரம்பிய உலகத்தில் உள்ளவர்கள் பால் இரக்கம் பூண்டு, அறிவு ஊட்டும் சிறந்த தொண்டை ஆசிரியர் மேற். கொள்ள வேண்டும். அறியாமையால் செய்யும் பிழை. களைப் பொறுக்கும் இயல்புக்கும் அவ்வருளே காரணமாக நிற்கும்.

குலனும் அருளும் ஒருங்கு இயைந்த குருவுக்குத் தெய்வ பக்தியும் அவசியமானது. கல்வியின் பயனே கடவுளை அறிதல் என்ற கொள்கையில் ஊறிய இந், நாட்டில் கடவுளை நினைத்தே கல்வியைத் தொடங்கு கிறார்கள். மாணுக்கர்களுக்குக் கல்வி புகட்டி அவர் களுடைய வாழ்நாள் நற்பயன் பெறும்படி செய்யும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/131&oldid=612750" இலிருந்து மீள்விக்கப்பட்டது