பக்கம்:கன்னித் தமிழ்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாத்தியார் ஐயா 135.

தால் இந்தக் காலத்துக்குப் போதுமானது. அந்தக் காலத்தில் இதெல்லாம் பலிக்காது; படித்ததைச் சந்தேக விபரீதமின்றிப் படித்திருக்க வேண்டும்.

நன்றாகப் படித்தவரெல்லாம் வாத்தியாராக முடியுமா? எவ்வளவோ படித்தவர்களைப் பார்க்கிருேம். புத்தகத்தில் பிள்ளையார்சுழி முதல் முற்றிற்று வரையில் படித்துத் தெரிந்து கொண்டிருப்பார்கள். ஏதாவது ஒரு விஷயத்தை எடுத்துச் சொல்லுமையா என்றால் ஒரே குழப்பம் வந்துவிடும். முன்னுக்குப்பின் பொருத்த மில்லாமல் உழப்புவார். சொல்கிற விஷயம் இன்ன தென்றே விளங்காது. கொஞ்சம் விளங்கிலுைம் அழுத்தமாகப் பதியாது. உலக அநுபவமும் கல்விப் பழக்கமும் உடைய நமக்கே புரியாதபடி இருந்தால் குழந்தைகளுக்கு அவர் எதைச் சொல்லித் தரப் போகிறார்? படிப்பு வேறு படித்ததைக் கற்றுத் தரும் சக்தி வேறு. இரண்டும் யாரிடம் பொருந்தியிருக் கின்றனவோ அவரே உபாத்தியாயர் வேலைக்குத் தகுதியானவர்.

- கல்ைபயில் தெளிவு வாத்தியாருக்கு வேண்டுமென்று நிறுத்திவிடாமல் மேலே கட்டுரை வன்மை’ வேண்டு மென்று சொல்கிறது இலக்கணம். ஒரு விஷயத்தை, கேட்பவர் உள்ளத்தில் பதியும்படி சொல்லும் திறமை தான் அது. கட்டுரை என்பது ஒரு கலை. அதில் நல்ல வன்மை இருக்கவேண்டும். சும்மா என்னைத் தெய்வம் என்று கொண்டாடுங்கள்’ என்று வாத்தியார் ஐயா சொன்னல் மக்கள் கொண்டாடி விடுவார்களா, என்ன? உரைகல்லில் உரைத்துப் பார்த்து, ‘ஐயா நல்ல மனுஷர்; நன்றாகப் படித்திருக்கிறார், சாமர்த்திய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/133&oldid=612757" இலிருந்து மீள்விக்கப்பட்டது