பக்கம்:கன்னித் தமிழ்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

கன்னித் தமிழ்


மாகச் சொல்லித் தருகிறார்’ என்று தேர்ந்தால்தான் கிராமத்து மக்கள், “வாத்தியாரையா, வணக்கம்’ என்று கும்பிடு போடுவார்கள். இல்லாவிட்டால், ‘அழுகற்பழம் அண்ணுவிக்கு” என்ற பழமொழியைச் சொல்லிக் குப்பைத் தொட்டியில் போடும் பதார்த்தத் தைத்தான் நிவேதனம் செய்வார்கள்.

இவ்வளவும் சொன்னது போதாதென்று வாத்தி யாரை வடிகட்டிப் பார்க்கும் இலக்கணக்காரர்கள், வாத்தியார் இன்ன இன்ன பொருளைப்போல இருக்க வேண்டும் என்று வேறு சொல்லியிருக்கிறார்கள். மிகவும் விரிவாகவும் நுணுக்கமாகவும் சொல்ல வேண் டியதைச் சுருக்கமாகச் சொல்வதற்கு, உபமானம் ஒரு நல்ல வழி. உபமானத்தை மனம்போன மட்டும் விரித்துப் பார்த்துக் கொள்ளலாம். வேதாந்தத்தில் வரும் உபமானங்களுக்குக் கணக்கு வழக்கு உண்டா? இந்தத் தந்திரத்தைத் வேத காலத்து முனிவர்களும் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்; ஏசு கிறிஸ்துவும் தெரிந்திருக்கிறார், இராமகிருஷ்ண பரமஹம்ஸ்ரோ உபமானக் கதைகள் சொல்லி, விளங்காதவற்றை யெல்லாம் விளங்கவைத்து விடுகிறார்.

வாத்தியார் ஐயாவை எந்த எந்தப் பொருளுக்குச் சமமாகச் சொல்லுகிறார்கள் என்பதை இனிமேல் கவனிப்போம்.

4. “வாத்தியார் ஐயா பூமி தேவியைப் போல் இருக்க வேண்டும்; மலையைப்போல் இருக்க வேண்டும்; தரா சைப் போலவும் மலரைப் போலவும் இருக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/134&oldid=1286023" இலிருந்து மீள்விக்கப்பட்டது