பக்கம்:கன்னித் தமிழ்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாத்தியார் ஐயா 12?

வேண்டும்’ என்று பழைய தமிழர்கள் சொல்லியிருக் கிறார்கள்.

பூமி தேவியை உபமானம் சொல்லும்போது நமக்கு ஒரு விஷயம் நிச்சயமாக நினைவுக்கு வந்து விடுகிறது. பொறுமைக்குப் பூமி தேவியைச் சொல்லிச் சொல்லி அலுத்துப் போயிருக்கிருேமே!

படிக்கும் பிள்ளைகள் அறிவு பெறுவதற்காக ஆசிரியரை அணுகுகிறார்கள். பிழை செய்வது அவர் களுக்கு இயல்பு. அதை மாற்றித் திருத்தமாக இருப் பதையே இயல்பாகப் பண்ணும் பொறுப்பைத்தான் வாத்தியார் ஏற்றுக் கொண்டிருக்கிறார். ஆகையால் மாணுக்கர்களிடம் சிடு சிடுவென்று விழுந்தால் அவர் கள், வாத்தியார் என்றால் காட்டு மிருகம்’ என்று நினைத்து விடுவார்கள். தமிழ் நாட்டில் வாத்தியா ருடைய பேரைப் பூச்சாண்டியாகச் சொல்லிப் பயமுறுத்தி வந்த காலமும் உண்டென்பது நமக்குத் தெரியுமே பயப்படுவதற்குரிய பொருளாக ஆசிரியர் இருக்கக் கூடாது.

நிலத்தைப் பொறுமைக்கு உபமானமாகச் சொல் வதோடு, பெருமைக்கும் திண்மைக்குங்கூட உவமை யாக எடுத்தாளுவார்கள். “நிலத்தினும் பெரிதே’ என்று பெருமைக்கு அதைச் சொல்வதை இலக்கியங், களிலே காணலாம். ஆசிரியர் பெருமையில் நிலத் தைப்போல இருக்க வேண்டும். பெருமை என்பது அவருடைய குணப் பெருமையையும் க்ல்விப் பெருமை யையும் குறிக்கும்.

அடுத்தபடி நிலத்திற்குரிய சிறப்பியல்பு:திண்மை. “மண்கடின மாய்த்தரிக்கும்’ என்று சாஸ்திரம் சொல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/135&oldid=612763" இலிருந்து மீள்விக்கப்பட்டது