பக்கம்:கன்னித் தமிழ்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

கன்னித் தமிழ்


கிறது. மனத்திண்மை ஆசிரியரிடம் இருக்க வேண்டும். எந்த விஷயத்தையும் சந்தேகமின்றி உறுதியாகத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். எத்தகைய கேள்வி வந்தாலும் மாருத திண்மை இருந் தால்தான் எக்காலத்தும் மாளுக்கர்களுடைய அறிவை வளர்க்க உபயோகமாக இருப்பார்.

நிலமானது பருவத்துக்கு ஏற்றபடியும் வேளாளர் கள் எவ்வளவுக்கு எவ்வளவு உழுது எருவிட்டுச் சிரமப் பட்டுப் பயிரிடுகிறார்களோ அதற்கு ஏற்றபடியும் பயன் கொடுக்கும். கையைக் கட்டிக் கொண்டு வீட்டில் உட்கார்ந்திருந்தால் நிலம் வளம் சுரக்காது. நினைத்த பொழுதெல்லாம் விளைச்சலையும் தராது. பயிர் விளையப் பருவம் உண்டு; முயற்சியும் அவசியம். -

வாத்தியார் ஐயா நிலம்; மாளுக்கன் உழவன். மாளுக்கனுடைய பருவத்துக்கு எற்றபடி வாத்தியார் ஐயா சொல்லித் தரவேண்டும். தமக்குத் தெரிந்த சமாசாரங்களை யெல்லாம் பையனுடைய மூளையில் ஏற்றிவிட வேண்டுமென்ற பெருங்கருணை வியர்த்த மாகி விடும். யார் யார் எந்த எந்தப் படியில் இருக்கி ருர்கள் என்பதை நன்றாகத் தெரிந்துகொண்டு அவர்க ளுடைய பக்குவத்துக்கு ஏற்ற விஷயங்களைக் கற்பிக்க வேண்டும். எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் இன்னவென்று தெரியாத மாணுக்கனுக்குத் தொல் காப்பியச் சூத்திரங்களைச் சொல்லித் தந்தால் அவனுக் குத் தலைவலி உண்டாவதுதான் லாபம். வாத்தியார் ஐயா தம்முடைய சக்தியை வீளுகச் செலவிடுகிறவரா கிறார். என்னடா இது, பேரிழவாக இருக்கிறதே!’ என்று மானுக்கன் தொல்காப்பியச் சூத்திரத்தையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/136&oldid=1286024" இலிருந்து மீள்விக்கப்பட்டது