பக்கம்:கன்னித் தமிழ்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாத்தியார் ஐயா 129

தொல்காப்பியரையும் சேர்த்துத் திட்ட ஆரம்பிப்பான். ஆசிரியருக்குத் தொல்காப்பியரிடத்தில் பக்தி இருக் கலாம்; தொல்காப்பியத்தில் நல்ல பயிற்சி இருக் கலாம். பாத்திரமல்லாத இடத்தில் பிச்சை இட்ட” வாத்தியார் குற்றத்துக்காகத் தொல்காப்பியர் நிந்த னைக்கு ஆளாகிறார்,

மாளுக்கனுடைய முயற்சிக்கு ஏற்ற அளவில்

போதிக்க வேண்டும். சிறு முயற்சி செய்பவனுக்குப் பெரிய பொருளைப் போதித்தால் அந்தப் பொருளி

னிடத்தில் மாணுக்கனுக்குக் கெளரவ புத்தி ஏற்படாது. இலவசமாக இறைபடும் பண்டமென்று எண்ணிக் கொள்வான். வாத்தியாருடைய பெருங் கருணையைப் பாராட்டக் கூடாதோ?’ என்று நீங்கள் கேட்கலாம். அதெல்லாம் அறிவு நிரம்பின பெரியவர்கள் கடமை பல்லவா? மாணுக்கன் அவ்வளவு உயர்ந்த பண்புடைய வகை இருந்தால் ஆசிரியரிடம் எ த ற் கா க வருகிருன்?

எந்தத் தொழிலிலும் உலக இயல்பு தெரிந்து நடக்கவேண்டும். பொருளைச் சிக்கனமாகச் செலவு செய்யவேண்டும் என்று சொல்கிருேம். அறிவுச் செல் வத்தையும் சிக்கனமாகத்தானே வழங்க வேண்டும்? முயற்சி செய்யச் செய்ய வஞ்சகமின்றி வாரி வழங்கிளுல் வாங்கிக் கொள்பவனுக்கும் மகிழ்ச்சி, கொடுப்பவனுக் கும் திருப்தி உண்டாகும். ஆகவே பருவம், முயற்சி என்பனவற்றின் அளவறிந்து வாத்தியார் ஐயா தம் தொழிலை நடத்தி வரவேண்டும். இலக்கண நூல், ஆசிரியருக்குப் பூமியை உவமையாகச் சொல்லும் போதும், இந்த மாதிரி இயல்புகளையே குறிக்கின்றது.

9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/137&oldid=612769" இலிருந்து மீள்விக்கப்பட்டது