பக்கம்:கன்னித் தமிழ்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

கன்னித் தமிழ்


பாதையின் இருமருங்கும் இயற்கை யெழில் தவழும் சோலைகளைப் பார்க்கிருேம். ஆணும் பெண்ணும் காதல் புரிவதைக் காண்கிருேம். பிரிவில்லாமல் மக்கள் வாழும் ஒற்றுமைக் காட்சிகள் தெரிகின்றன. வீர இளைஞர்கள் அறத்தைக் காக்கப் போர் செய்வதைக் காண்கிருேம். அந்தப் பகுதியின் இறுதியிலே சில காவிய மாளிகைகள் வானை நோக்கி நிமிர்ந்து நிற்கின்றன.

பிறகு கோயில்களைக் காண்கிருேம். திருமாலும் சிவபெருமானும் அன்பும் அறிவுமுடையவர்களுடைய தோத்திரங்களில் மகிழ்ந்து ஈடுபட்டிருக்கிறார்கள். சைன பெளத்தப் புலவர்கள் கட்டிய மாளிகைகளும் கண்ணில் படுகின்றன. சில சில காவியங்களாகிய மாளிகைகளில் ஒருசார் கோயிலும் இணைந்து காணப் படுகின்றன.

கம்பன் கட்டிய பெருமாளிகை அதோ இன்றும் மாசுமறுவின்றி ஐம் புல னு க்கும் விருந்தளித்துக் கொண்டு நிற்கிறது. சிறு சிறு கட்டிடங்கள், இடிந் தும் புகையடைந்தும் நிற்கின்றன. பிற மதத்தினரை அடிக்க ஆயுதங்களை உள்ளே மறைத்து வைத்திருக் கும் சில கட்டிடங்கள், புராணங்கள் என்ற பெயரோடு

விளங்குகின்றன.

இதற்குமேல் பாதை கரடுமுரடாக இருக்கிறது. சில இடங்களில் குழிகள், யமகமென்றும் திரியென்றும் பச்சைச் சிங்காரமென்றும் பணக்காரன் புகழென்றும் பேர்படைத்த கல்லும் முள்ளும் காலை உறுத்து கின்றன. х - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/14&oldid=1285971" இலிருந்து மீள்விக்கப்பட்டது