பக்கம்:கன்னித் தமிழ்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியச் சாலை 7.

எப்படியோ பொறுமையோடு இந்தப் பகுதியைக் கடந்து வந்துவிட்டோம். இதோ பாரதி மண்டபம் கண்ணைக் குளிர்விக்கிறது. வெறிச்சென்று கண்ணைத் துன்புறுத்திக் காலைப் புண்ணுக்கும் இடத்தைத் தாண்டி வந்த நமக்கு இந்த மண்டபம் எவ்வளவு ஆறுதல் அளிக்கிறது. இதில் உட்கார்ந்து பார்ப்போம். இப்போது கடந்து வந்தோமே, அந்தப் பகுதிதான் நமக்குத் தென்படுகிறது.

முதலிலிருந்தே பிரயாணம் செய்தவர்களுக்கு இந்த இ ைட .ெ வ ளி க்கு ப் பின்னலே கலை மாளிகைகளும் தென்றல் வீசும் பொழில்களும் இருப் பது தெரியும். திடீரென்று இந்த மண்டபத்தில் அமர்ந்து பார்க்கிறவர்களுக்கு முன்பாதை முழுவதும் கல்லும் முள்ளுமாகவே தோற்றும். அந்தக் கல்லு முள்ளுப் பாதைக்கு முன்னுல் நல்ல வழி, அழகிய வழி இருக்கிறதென்று சொன்னல்கூட அவர்கள் நம்புவ தில்லை. அதெல்லாம் பழங் கதை’ என்று அடித்துப் பேசுகிறார்கள். அவர்களுக்குப் பொறுமையும், பார்க்க வேண்டுமென்ற ஆசையும் இருந்தால், தமிழ் இலக் கியச் சாலையின் அடிமுதல் எத்தனை வளங்கள் குலுங்கு கின்றன என்பதை அறிய முடியும்; தமிழன் சரித்திரம் எவ்வளவுக்கு எவ்வளவு பழமையென்று தெரிகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவனது இலக்கியக் செல்வமும் சிறந்ததென்பது தெரியவரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/15&oldid=612814" இலிருந்து மீள்விக்கப்பட்டது