பக்கம்:கன்னித் தமிழ்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெயர் வைத் த வர் யார்?

ஒரு வீட்டில் ஒரு குழந்தை பிறக்கிறது. அதைப் பாராட்டிப் போற்றி எடுத்து வளர்க்கும் உரிமையும் ஆவலும் உடைய தாய்தகப்பன்மார் குழந்தைக்குப் பெயர் வைக்கிறார்கள். அந்தப் பெயர் சம்பிரதாயத் துக்காக வைத்த நீண்ட பெயராக இருந்தால், குறுகலான பெயர் ஒன்றை வைத்துத் தாயோ, பாட் டியோ அழைக்கிருள். அந்தப் பெயரே ஊரெல்லாம் பரவிப் போகிறது. சுப்பிரமணியன் என்று பெயர் வைத்தாலும், வழக்கத்தில் மணி யென்றும் சுப்பு என்றும் அது குறுகிப் போவதைப் பார்க்கிருேம்.

எனவே, குழந்தைக்கு வீட்டில் என்ன பெயர் வழங்குகிறதோ அதுவே நாட்டிலும் வழங்கும். இது தான் இயற்கை. இதை விட்டுவிட்டு, ‘ஊரில் உள்ள வர்கள் இவனுக்கு ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள். அதைத்தான் வீட்டில் வழங்குகிறார்கள்’ என்று

சொன்னுல் அது அவ்வளவு பொருத்தமாகத் தோன்ற வில்லை. - -

தமிழென்னும் குழந்தைக்குப் பெயர் வைத்தவர் கள் யார்?’ என்றால், ‘தமிழர்கள்’ என்றுதானே. சொல்ல வேண்டும்? இல்லை இல்லை, வெளியார்கள் வைத்த பேர் மாறி அப்படி ஆகிவிட்டது” என்று சில

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/16&oldid=612848" இலிருந்து மீள்விக்கப்பட்டது