பக்கம்:கன்னித் தமிழ்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாத்தியார் ஐயா r 139. இல்லை? கொடுத்தால் குறைந்து விடுமா? நான்

வாங்கிக் கொள்ளத் தகாதவளு?’ என்று கேட்பார்கள். அவன் பணக்காரனுக இருப்பதற்கு வாத்தியார் ஐயாவா காரணம்? அவருடைய பாடத்திற்கும் அவர் னுடைய பணத்திற்கும் என்ன சம்பந்தம்? ஆகவே, அவாவை உடையவரை ஆசிரியர் பதவியில் வைத் திருக்கக் கூடாதென்று தமிழர்கள் சொல்லியிருக்கிறார் கள். கொடுக்க வில்லையே! என்ற குறை வாத்தியார் ஐயா உள்ளத்தில் தோன்றிவிட்டால், பிறகு அவர் எப்படி நன்றாகக் கல்வியைக் கற்பிக்க முடியும்?

அடுத்தபடியாக வாத்தியார் ஐயாவுக்கு விரோதி வஞ்சகம். ஆசிரியர் உண்மையான ஞானம் வாய்ந்: தவராக இருக்கவேண்டும். ஆசிரியர் கூட்டத்தில் அடிப்படையில் இருப்பவர் போதகாசியர்; மேற்படியில் இருப்பவர் ஞானுசிரியர். அவர்கள் ஒரே சாதியினர். ஆகையால் உள்ளத்தால் பொய்யாது ஒழுகவேண்டி யது அவர்கள் கடமை. நேர்மைக் குணம் அவர் களுக்கு இன்றியமையாதது. தெரிந்ததை மறைத்து வைப்பதும், மாணுக்கனை வஞ்சிப்பதும் ஆசிரியரைப் பாவிகளாக்கிவிடும். மெய்யன்பு உடையவர்களிடம். வஞ்சகம் இராது. மாணுக்கர்களைச் சொந்தப்பிள்ளை களைப் போலப் பாதுகாக்கக் கங்கணம் கட்டிக் கொண்ட வாத்தியார் ஐயா அந்த மாணுக்கர்களிடத். தில் அன்பில்லாமல் பழகுவது நியாய மன்று. ஆகவே, வஞ்சகம் அவரிடத்தில் எள்ளளவும் தலைகாட்டக் கூடாது.

மெத்தென்று விஷயங்களைக் க ற் பி க் க | ம ல்: மாளுக்கர்களைப் பயமுறுத்திக் கற்பித்தல் கூடாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/147&oldid=612805" இலிருந்து மீள்விக்கப்பட்டது