பக்கம்:கன்னித் தமிழ்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

கன்னித் தமிழ்


வாத்தியார் ஐயாவின் குரலைக் கேட்டால் மாளுக்கர்கள்

நடுநடுங்கி விடுவார்களென்று சொல்வது அவருடைய பெருமைக்குக் காரணமாகாது. இனிமையாகப் பேசத் தெரியாதவன் வாத்தியார் வேலைக்கே வரக்கூடாது. வாத்தியார் வேலை முழுவதும் நாவில் இருக்கிறது; அந்த நாக்கு எவ்வளவு மிருதுவாக இருக்கிறது! பின்னும் அதில் இனிமை சேரவேண்டும். கடுமை யான பேச்சில்ை அச்சத்தை உண்டாக்கும் வாத்தியார் ஐயா, தம்முடைய பலவீனத்தைத்தான் வெளிப்படுத் தினவர் ஆகிறார், அறிவுப் பலமும், ஒழுக்க உயர்வும் உடையவர்கள் அச்சம் உண்டாகும்படி வார்த்தையாட மாட்டார்கள்.

6

முன் நல்ல ஆசிரியர்களுக்கு வேண்டுமென்று மொழிந்த குணங்கள் இல்லாமையும், இழிந்த குணத் தோடு கூடிய இயல்பும், பொருமையும், பேராசையும், அச்சமுண்டாகப் பேசுவதும் கெட்ட வாத்தியாருடைய லட்சணமென்று சொன்ன இலக்கண நூலாசிரியர் கள், மேலும் அவரைக் கழற்குடம், மடற்பனை, பருத்திக் குண்டிகை, முடத்தெங்கு என்று வைகிறார் கள். ‘நாயே, பேயே, கழுதையே’ என்று ஒருவனை அவன் குணங்களுக்கு ஏற்ற உபமானங்களால் நாம் அழைக்கும்போது, “ஆகா, என்ன அழகான உவமை’ என்றா கேட்பவர்கள் நினைக்கிறார்கள்? அதை வசவென்று உலக சம்பிரதாயத்தில் சொல் கிருேம். அந்த மாதிரியே உபமான மென்ற உருவத் தில் மேலே சொன்ன கழற்குடம் முதலிய வார்த்தை களால் கெட்ட வாத்தியாரைப் பெரியவர்கள் சொல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/148&oldid=1286030" இலிருந்து மீள்விக்கப்பட்டது