பக்கம்:கன்னித் தமிழ்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாத்தியார் ஐயா 141

கிறார்கள். வசவென்று சொன்னலும் ஒன்றுதான்; உபமானம் என்று சொன்னுலும் ஒன்றுதான். ஏன் அப்படிச் சொன்னர்கள் என்பதைக் கவனிக்கலாம்.

பழைய காலத்தில் எந்தப் பொருள்களையேனும் கணக்குப் பிண்ண வேண்டுமானுல் கழற்சிக்காயை வைத்துக்கொண்டு எண்ணுவது ஒரு வழக்கம். ஒவ் வொன்றாக எண்ணும்போது ஒவ்வொரு கழற்சிக் காயை ஒரு குடத்திற்குள் போடுவார்கள். இப்படிப் போட்ட கழற்சிக்காய்களைக் கடைசியில் எடுத்து எண்ணுவார்கள்.

கழற்சிக் காய்களில் எல்லாம் ஒரே அளவாக இருப்பதில்லை. சின்னதும் இருக்கும், பெரியதும் இருக்கும். நல்ல உருண்டையாகச் சில இருக்கும்; சில ஒழுங்கற்ற உருவத்தோடு இருக்கும். முதலில் குடத்திலே டோடும்போது எந்த முறையில் காய்கள் விழுகின்றனவோ அதே வரிசையில் ஒன்றன்பின் ஒன்றாக மீட்டும் எடுக்கும்போது வருவது இல்லை. ஒரேயடியாகச் சேர்ந்து விழுந்துவிடும். போடும்போது விழுந்த முறைப்படியே எடுக்கும்போதும் வரவேண்டு மென்றால் கழற்குடத்தில் நடக்காது. செங்கல்லாக இருந்தால் ஒன்றன்மேல் ஒன்றை அடுக்கி மீட்டும் அப்படியே எடுக்கலாம். கழற்சிக்காய் ஒன்றைேடு ஒன்று ஒட்டாது; போட்ட இடத்தில் இராது. ஆகவே, எடுக்கும்போது முறைமாறி வருவதிலும் பல சேர்ந்து விழுவதிலும் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

கழற்சிக்காய் பெய்த குடத்தில் காணப்படும் இந்த முறைமாற்றம் போலி வாத்தியார் ஐயாவிடம் இருக் கும். அவர் வாசித்த காலத்தில் இன்னதன் பின் இது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/149&oldid=612811" இலிருந்து மீள்விக்கப்பட்டது