பக்கம்:கன்னித் தமிழ்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

கன்னித் தமிழ்


என்ற முறைப்படியே ஒழுங்காகக் கற்றுக் கொண் டிருப்பார். சொல்லிக் கொடுக்கும்போதோ, அந்த முறையெல்லாம் மறந்து போய்விடும். தெரிந்த வற்றைத்தான் சொல்லிக் கொடுப்பார். ஆளுல் முறைமாறிப் போய்விடும். ஒன்றாென்றாகச் சொல்லு வதை விட்டு ஒரேயடியாகப் பல விஷயங்களைத் திணித்துவிடுவார். கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்று முறையாகச் சொல்லிக் கொடுக்காமல் வகுத்தலிலிருந்து ஆரம்பித்தால் ைப ய னு க் கு ஒன்றுமே வராது. இலக்கிய இலக்கணத்திலும் இப்படி முறை உண்டு. அந்த முறை பிறழ்ந்தால் மாணுக்கனுக்கு வீண் சந்தேகங்கள் கிளம்பும். முறை மாறிச் சொல்லிக் கொடுக்கும் வாத்தியாரைக் கழற் குடத்தோடு ஒப்பிட்டுப் பேசுவதில் பிழை என்ன?

பெய்தமுறை அன்றிப் பிறழ உடன்தரும் செய்தி கழற்பெய் குடத்தின் சீரே. (பெய்தல் - இடுதல். - பிறழ மாறும்படி உடன் தரும் ஒருங்கே கொடுக்கும். செய்தி - இயல்பு.)

இன்னும் சில வாத்தியார்கள் உண்டு. நன்றாகப் படித்திருப்பார்கள். ஆளுல் அவரிடம் உள்ள கல்வியை எளிதில் நாம் பெற முடியாது. அவர்களிடம் நடையாய் நடந்து அவர்களுடைய கோபதாபங்களுக்கு உட்பட் டுக் கற்றுக் கொாள்ளவேண்டும். அவர்களாக மனம் வந்து சொல்லிக் கொடுத்தால் ஏதாவது தெரிந்து கொள்ளலாம். மாளுக்கன் சொந்த முயற்சியிலுைம் பக்தியிலுைம் அவர்கள் உள்ளத்தைக் கணிவிக்க இயலாது. இந்த இனத்தாரை இலக்கணக்காரர்கள் பனைமரம் என்று சொல்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/150&oldid=1286031" இலிருந்து மீள்விக்கப்பட்டது