பக்கம்:கன்னித் தமிழ்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

கன்னித் தமிழ்


‘இந்தக் குணங்கள் கெட்ட வாத்தியார்களுக்கு உரியன” என்று சொல்லவில்லை; இந்த லட்சணங்களை உடையவர்கள், ஆசிரியர் ஆகலாம் என்ற சிந்தனைக்கே உட்படாதவர்களாம். ஆசிரியர் ஆகுதல் அவர்பால்

இல்லையென்று சாதுரியமாகச் சொல்கிறது. சூத்திரம்.

எல்லாவற்றையும் பார்க்கும்போது வாத்தியார் ஐயா என்ற பட்டம் எளிதாகக் கிடைக்கக் கூடிய தென்று தெரியவில்லை.

ァ - வாத்தியார் ஐயா தொழிலாளி அல்ல. தமிழர் கொள்கைப்படி அவர் ஒரு தாதா, வள்ளல். மாணுக் கர்கள் இரவலர். திருவள்ளுவர், “பணக்காரருக்கு முன்னுல் நின்று யாசிக்கும் இரவலரைப்போல ஆசிரி ரிடம் கல்வியை யாசித்து ஏங்கி நின்று கற்றவர் மேன்மை அடைவார்; அப்படிக் கல்லாதவர் கடைப் பட்டவர்” என்று சொல்கிறார். பாடம் சொல்லிக் கொடுப்பது தொழில் அல்ல; கலை. அது ஒரு தியாகம். அழியும் பொருட் செல்வத்தை வழங்கும் வள்ளலைக் காட்டிலும் அழியாத கல்விச் செல்வத்தை வழங்கும் வள்ளல் பெரியவர்; சமுதாயத்தின் கொழுந்து அவர். அவர் பாடம் சொல்வதை ஈதல்’ என்றே இலக்கணக்காரர் சொல்கிறார்.

கல்விக் கொடை எப்படி நிகழவேண்டும்? என் பதை இலக்கணக்காரர்கள் வகுத்திருக்கிறார்கள். வாத் தியார் ஐயா பாடம் சொல்லிக் கொடுக்கும் முறைதான் அது. பாடம் சொல்லும் காலம் ஏற்றதாக இருக்க வேண்டும். மூளையைப் பொறுத்த விஷயம் ஆகையால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/154&oldid=1286033" இலிருந்து மீள்விக்கப்பட்டது