பக்கம்:கன்னித் தமிழ்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாத்தியார் ஐயா J45

இடம் ஒன்றானுல் தேங்காய் விழும் இடம் வேருக இருக்கும். ஒருவன் தன் வீட்டுப் புறக்கடையில் மரத்தை வைத்துத் தண்ணிர் ஊற்றிக் காப்பாற்றில்ை முடத்தெங்கு அடுத்த வீட்டுப் புறக்கடையில் தலையை நீட்டும். அதிலிருந்து விழும் மட்டையோ தேங் கயோ அடுத்த வீட்டுச் சொத்தாகப் போய்விடும்.

எவ்வளவோ பயபக்தியோடு வந்து வழிபடும் மாளுக்கனைப் புறக்கணித்துவிட்டு, வருவோர் போவோ ருக்கெல்லாம் உபதேசம் செய்யும் வாத்தியார் ஐயாவை முடத்தெங்கென்று சொல்கிறார்கள்.

பல்வகை உதவி வழிபடு பண்பின் அல்லோர்க்கு அளிக்கும் அதுமுடத் தெங்கே,

வழிபடும் மாளுக்கன் அறிவுப் பசியோடு ஏமாந்து நிற்கச் செய்வது பாவம் அல்லவா?

போ லி வாத்தியாரின் இலக்கணங்களைத் தொகுத்து இலக்கண நூல் சொல்வதைப் பாருங்கள்:

மொழிகுணம் இன்மையும்

இழிகுண இயல்பும் அழுக்காறு அவாவஞ்சம்

அச்சம் ஆடலும் கழற்குடம் மடற்பனை

பருத்திக் குண்டிகை முடத்தெங்கு ஒப்பென

முரண்கொள் சிந்தையும் உடையோர் இலர்ஆ - சிரியர்ஆ குதலே.

(அச்சம் ஆடல் - பயம் உண்டாகப் பேசுதல்.)

10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/153&oldid=612826" இலிருந்து மீள்விக்கப்பட்டது