பக்கம்:கன்னித் தமிழ்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

கன்னித் தமிழ்


கொஞ்சமாகவே கல்வியை ஏற்றுக் கொண்டிருக்கும். பாடம் சொல்லித் தரும்போதும் சிறிது சிறிதாகவே சொல்லிக் கொடுப்பார். மாணுக்கனுக்கு எவ்வளவு ஆர்வம் இருந்தாலும் சரி, அவருடைய ஆமை நடை மாருது. பழங்காலத்தில் இப்படிச் சில தமிழாசிரியர் கள் இருந்தார்கள். ஏதாவது ஒரு நூலைச் சிரமப் பட்டுக் கொஞ்சங் கொஞ்சமாகப் படித்துத் தேர்ச்சி பெற்றிருப்பார்கள். அவர்களிடம் யாரேனும் போய்ப் பத்துப் பாடல்களை ஒருங்கே கேட்க வேண்டுமென்று ஆசைப்பட்டால், “தமிழ் கிள்ளுக் கீரையா? சுலபமாக வாரி இறைக்கக் கடலைச் சுண்டலா? நான் எவ்வளவு கஷ்டப்பட்டுக் கற்றுக் கொண்டேன், தெரியுமா?” என்று சொல்வார்கள். அவர்கள் கஷ்டப்பட்டதற்கு மாணுக்கன் எப்படிப் பிணையாவான்?

பருத்திக் குடுக்கையின் இயல்பைச் சொல்லும் சூத்திரம் பின் வருமாறு:

அரிதிற் பெயக்கொண்டு

அப்பொருள் தான்பிறர்க்கு எளிதி வில்லது பருத்திக் குண்டிகை. (அரிதின் - கஷ்டத்தோடு. பெய - செலுத்த, எளிது சவு இல்லது - எளிதிலே கொடுக்கும் இயல்பு இல்லாதது.) முடத்தெங்கு வாத்தியார் ஒருவகை. கண்ண பிரானப்பற்றி ஒரு கதை கேட்டிருக்கிருேம். சத்திய பாமைக்காக அப்பெருமான்.பா. ரி சடாத மரம் கொணர்ந்து அத்தேவி வீட்டில் நட்டானும். அது வளைந்து வளர்ந்து ருக்மிணியின் வீட்டில் பூவை உதிர்த்ததாம். முடத்தெங்கு என்பதற்கு வளைந்த தென்னமரம் என்று பொருள். வேர் படர்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/152&oldid=1286032" இலிருந்து மீள்விக்கப்பட்டது