பக்கம்:கன்னித் தமிழ்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாத்தியார் ஐயா 149

கொடுத்தல் - கொடுக்க; சொல்லித் தரவேண்டும். என்பஎன்று பெரியவர்கள் சொல்வர்கள்.)

இந்த மாதிரியான வாத்தியார் ஐயா இன்று தமிழ் நாட்டில் இருந்தால்-அதைப்பற்றி இப்போது நினைத்து என்ன பிரயோசனம்? பழைய காலத்தில் தான் இப்படி இருந்தார்கள் என்பது என்ன நிச்சயம்? இருந்தார்களோ, இல்லையோ, வாத்தியார் ஐயா இன்னபடி இருக்கவேண்டும் என்று ஒரு திட்டம் வகுத்திருக்கிறார்கள்; அவ்வாறு நடக்க முயன்றும் இருப்பார்கள். அந்தத் திட்டத்தின் உயர்வையும் அதை அமைத்துக் கொண்டவர்களின் வாழ்க்கை லட்சி யத்தையும் நாம் போற்றிப் பாராட்ட வேண்டும். நல்லதை நல்லதென்று சொல்வதில் லோபத்தனம்

எதற்கு?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/157&oldid=612839" இலிருந்து மீள்விக்கப்பட்டது