பக்கம்:கன்னித் தமிழ்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுதும் போதும்

தமிழர், காலத்தைச் சிறு பொழுது பெரும் பொழுது என்று இரண்டு பிரிவாகப் பிரித்தனர். அவற்றுள் சிறுபொழுது ஆறு, பெரும் பொழுது ஆறு. சிறுபொழுது ஐந்தென்பது ஒரு சாரார் கொள்கை. வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் என்னும் ஆறும் சிறு பொழுதுதளாம். இவை ஒவ்வொன்றும் பப்பத்து நாழிகைகளே. _i}Lபன. பெரும்பொழுதை இருதுவென்று கூறுவர் வட நூலார். அவை கரர், கூதிர், முன்பணி, பின்பணி, இளவேனில், முதுவேனில் என்பன. இவை முறையே ஆவணி முதலாக இரண்டு இரண்டு மாதங்களை உடையன. தமிழ் அகப்பொருள் இலக்கணத்தில் இந்தப் பொழுதுகளுள் இன்ன இன்னவை இன்ன இன்ன திணையைச் சார்ந்தன என்ற வரையறை சொல்லப் பெறும், முதல், கரு, உரி என்னும் மூவகைப் பொருள்களில் இவை முதற் பொருளைச் சாரும.

பொழுதை அளந்தறிவதற்குப் பண்டைத் தமிழர் கள் தன்னல் என்ற ஒரு கருவியைத் துணையாக்க் கொண்டனர். நீர் நிறைந்த பாத்திரத்தின் அடியிலே சிறு துளையிட்டு அதன் வழியே ஒரு பெற்றிப்படத்

துளிக்கும் நீரைக்கொண்டு நாழிகையை அறிந்தனா:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/158&oldid=612842" இலிருந்து மீள்விக்கப்பட்டது