பக்கம்:கன்னித் தமிழ்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுதும் போதும் 151

சிறுசிறு துளியாக வரும் அமைப்பை உடைய தாதலின் அந்த இயந்திரம் குறுநீர்க் கன்னல் என்றும் கூறப்படும்; நாழிகை வட்டில் என்னும் பெயரும் அதற்கு உண்டு. இக் கருவியைக் கொண்டு நாழிகையை அறிந்து கூறுவதற் கென்று அரசர்களுடைய அரண் மனையில் நாழிகைக் கணக்கர் என்னும் ஒருவகை ஊழியர் இருந்து வத்தனர்; -- ப்ொழுதளந்து அறியும் பொய்யா மாக்கள் தொழுதுகாண் கையர் தோன்ற வாழ்த்தி எறி நீர் வையகம் வெவீஇய செல்வோய் நின் குறு நிர்க் கன்னல் இனத்தென்று இசைப்ப

(முல்லைப் பாட்டு) என்பதைக் காண்க.

நீர்க்கன்னலைப் போல மணல் இட்டு வைத்த வட்டிலாலும் காலத்தை அறியும் வழக்கம் இருந்தது. இவற்றை யன்றி வேறு வகையான நுண்ணிய கருவி களும் அக் காலத்தில் இருந்தன வென்று தெரிய வருகின்றது. பெருங்கதையில் காலேந்திரம், கடிகையாரம் என்னும் இரண்டு கருவிகள் சொல்லப்படுகின்றன. அவற்றுள் பின்னதாகிய சூடிகையாரம் இக் காலத்துக் கடிகாரத்தைப் போன்றதொரு கருவியாக இருத்தலும் கூடும். - - o -

மேலே கூறியவை யாவும் செயற்கைக் கருவிகள். காலத்தை அறிவதற்கு இயற்கையிலேயேடபல கருவி

  • பொழுது அளந்து அறியும் பொய் பேசாத வேலைக்காரர்கள் அரசனைத் தொழுது காணும் கையை உடையவர்களாய் வெளிப்படை யாக வாழ்த்தி, “அலே வீசுகின்ற நீரை எல்லையாக உடைய உலகத்தை வெல்லும் பொருட்டுச் செல்லும் மன்னர் பிரானே, நீ செல்வதற்கு ஏற்ற தென்று குறுநீர்க் கன்னல் சொல்லும் காலம் இன்ன அளவுடையது (இத்தனே தாழிகை) என்று கூற.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/159&oldid=612845" இலிருந்து மீள்விக்கப்பட்டது