பக்கம்:கன்னித் தமிழ்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

கன்னித் தமிழ்


கள் அமைந்துள்ளன. யாமந்தோறும் பொழுதை அறிவிக்கும் யாமக் கோழியும், விடியற் காலத்தில் கரையும் காக்கையும் ஒரு வகையாகப் பொழுதைப் புலப்படுத்துகின்றன. இவை யாவற்றினும் சிறந் தவை மலர்கள். மலர்கள் தத்தமக்கு ஏற்ற போதிலே மலர்தலையும் குவிதலையும் உடையன்; அதலைன்றாே.

பொழுதின் முகமலர் வுடையது பூவே என்ற சூத்திரம் எழுந்தது?

இயற்கைப் பூம்பொழில் எப்பொழுதும் மலர்ச் சியை உடையது. பகலிலே சில மலர்கள் மலர் கின்றன; இரவில் அவை குவிந்து விட்டால், வேறு பல மலர்கள் மலர்ந்து தம் மணத்தைப் பரப்புகின்றன. இவற்றால் எப்பொழுதும் நிலமகள் பூமகளாகவே விளங்குகின்றனள். -

மரநூல் வல்ல கலைஞர், மலர்கள் தத்தமக்கென வரையறையுள்ள ஒரு காலத்தில் மலர்வதிலும் அவ் வாறே குவிவதிலும் தவறுவது இல்லை என்று கூறு கின்றனர்; ஒரு நாளில் இன்ன இன்ன போதில் இன்ன இன்ன மலர் மலரும் என்ற கணக்கையும் அறிந்திருக்கின்றனர். இங்ஙனம் அறிந்த பல மலர் களின் தொகுதியைக் கொண் டு மேல்நாட்டு மர நூல் வல்லுநராகிய லின்னுய்ஸ் (Limnaeus) என் பவர் ஒரு மலர்க் கடிகாரத்தை அறிவித்திருக்கிறார். அக் கடிகாரம் ஒவ்வொரு மணியிலும் மலரும் ஒவ்

வொரு மலரை உடையது. - -

இத்துறையில் ஆராய்ந்த வேருேர் அறிஞர் பாரத

நாட்டில் மலரும் மலர்களுள் ஒவ்வொரு மணியிலும்

மலர்கின்ற பல மலர்களின் பெயர்களைத் தொகுத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/160&oldid=1286035" இலிருந்து மீள்விக்கப்பட்டது