பக்கம்:கன்னித் தமிழ்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுதும் போதும் 五53

ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் பல ஆண்டுகளுக்கு முன் எழுதியுள்ளார். அவர் குறித்த மலர்களுள் நாம் அறிந்த சில மலர்களும் அவற்றிற்குரிய காலமும்

வருமாறு : سامسنسہ

மலர் மலரும் நேரம்

தாமரை : சூரிய உதய காலம் சண்பகம் : காலை 6-7 மணிக்கு இடையில் வாழைப்பூ மாலை 5-6 மணிக்கு இடையில் Lisp losesúsoã (Parijatha or Nectanthis Tristis): மாலை 6-7 மணிக்கு இடையில் 5. மல்லிகை : இரவு 7-8 மணிக்கு இடையில்.

மேலே கண்ட உண்மையைத் தமிழர் பண்டைக் காலத்தில் மிக துணுகி ஆராய்ந்து அறிந்திருந்தனர். தமிழ் நூல்களை ஆராய்ந்தால் மலர்களால் மக்கள் போதை அறிந்து கொண்டமைக்குச் சான்றாகப் பல செய்திகளைக் காணலாம். சிறு பொழுதுக்குரிய மலர் களைப் போலவே பெரும் பொழுதுக்கு உரிய மலர்கள் இன்னவை யென்ற வரையறையும் உண்டு. இப்படிப் போதை அறிவதற்கு உரியதாக இருப்பதனுல்தான் மலரும் பருவத்துள்ள பேரரும்பைப் போது என்று வழங்கினர்கள். பெரும் பொழுதை அறிவிக்கும் காரணத்தால் மலருக்கு நாள்.என்ற_ஒரு_பெயரும் உண்டாயிற்று. கதிரவனும் திங்களும் மேகம் முதலிய விற்றால் மறைந்த காலத்திலும், நாழிகைக் கணக்கர் அயர்ந்த காலத்திலும் இப் போதுகள் போதைத் தம் மலர்ச்சியில்ை அறிவிப்பதினின்றும் பிறழ்வதில்லை.

  • See ‘The Floral Clock’ by S. N. K. in the Benares Central

Hindu College Magazine—December, 1908.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கன்னித்_தமிழ்.pdf/161&oldid=612854" இலிருந்து மீள்விக்கப்பட்டது